சென்னையில் நல்ல மழை

மகிழச்செய்த மழை (தற்போது சென்னையில் நல்ல மழை) காய்ந்த மண் மாய்ந்த மனம் அனல் பறக்கும் அருவிப்பாறை உடல் சகிக்கா வெப்பம் வியர்வையில் உடலை ஒட்டிய உடை புடலைக் கொடியின் சருகுப் பந்தலில் நம்பியிருந்த நானூறு பூக்கள் கனத்த மௌனம் திடீரெனக் கலைந்தது.. தானாய் வந்து கதவு சாத்தும் ஆவேசக் காற்று தடித்த ஒலியில் வானம் இடித்த தருணம் எங்கும் மழைக் கோட்டம் மந்திரமாய் அபிநயக் குரல் மெளனம் கரைத்த மழை இலையுதிர்த்த கிளை மயங்கிக் கிடந்த விதை நீர்தெளித்து மூர்ச்சை நீக்கிய மழை கைகளை நீட்டி கீழே பார்த்த மேகம் பார்த்து மேலே பார்த்து வியந்தேன் கண்ணீர் பனித்தது முந்திக்கொண்டு மழைநீர் வழிந்தது கண்ணில் ஒவ்வொரு துளிகளுக்கும் வரவேற்புக் கவிதை வாசிக்க நினைக்கும் மனம்கொட்டத் துவங்கிய மழை மஞ்சள் வெயில். வெளிச்ச மழை! அலையலையாய் சாரல் நாக்கை நீட்டி சாரல்துளியை நான் ருசித்து விழுங்கிய மழை புள்ளியாய் விழுந்து விரிந்த ஈரம் தரிசு கேட்ட பரிசு மறுபடி மறுபடி மணலில் புள்ளியாய் விழுந்து மறைந்த மாயம் நீரின்றி நகர்ந்த நாட்களை எண்ணி வாடிய தோட்டம் பசியில் விரதம் சுவயான உணவாய் நோன்பைத் திறந்த மழை கொங்கை சுமந்த மேகம் இழுத்துச் சுவைத்த தாகம் மேகம் சுமந்த மழலை மண்ணின் மடியில்! இலையில் விழுந்த துளி சிரித்துச் சிலிர்த்த செடி உச்சந்தலையில் விழுந்த துளி அகில உடலும் சிலிர்த்த நொடி நனைந்துபோன காற்று தலையாட்டி மகிழ்ந்துபோன பூக்கள் மழையில் குளித்த புளுதி சேற்றில் நடந்த குருவி விவசாய விடியல் விளைந்தது மேகம் வானத்திலிருந்து குதித்தவனுக்கு மழலைகளால் பூமியில் மகிழ்ச்சி ஆரவாரம் விடை தெரியா விதைகள் கண்ணடித்த இமைகளுக்குள் நசுங்கிச் சிரித்த மழை உதட்டில் தெறித்த துளி உடனே உறிஞ்சிக் குடித்த மனம் விரிந்த மயில் நனைந்த தோகை வாணிபக் கப்பலில்லை பயணிகள் கப்பலுமில்லை காகிதக் கப்பல் ஆயிரம் செய்தான் கலைந்து போனாலும் சரி கவிழ்ந்து போனாலும் சரி வாசல் ஓடையில் மழைதரும் நீர் வர வாசம் தரித்தான் மகன் எதற்கும் ஒப்பில்லா மழை துளியே..மழையே.. இனி ஒதுங்க மாட்டேன் குடைக்குள் பதுங்க மாட்டேன் போன மழையின் ஒரு குவளை மழையை ஒளித்து வைத்தேன் இன்றதைப் பருகி இன்னொரு குவளை எடுத்து வைப்பேன் என் வீட்டில் என்றும் மழை! 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)