ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா ஜூலை 4ல் துவக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் பகுத்பு சுல்தான் செய்யது இப்ராகிம் ஷகீதுஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 345 ஆம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா மவுலீது டன் (புகழ் மாலை) ஜூலை 4ல் துவங்கவுள்ளது. ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டுதோறும் சந்தனக் கூடு திருவிழாவை மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக மர்ஹும் நடத்தி வருகின்றனர். விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, . கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் , ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள். ஜூலை 4 மாலை 6.30 மணிக்கு பாதுஷா தாயகத்தின் மவுலீதுடன் விழா துவங்குகிறது. ஜூலை 13 மாலை தர்ஹா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும். ஜூலை 14ல் மாலை 5.30 ) மணிக்கு கொடி ஏற்றப்படும். ஜூலை 26 மாலை முதல் 27 அதிகாலை வரை சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார்கள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)