தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு துவங்கியது

சென்னை: தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பணி, தொழில், வியாபாரம், படிப்பு சம்பந்தமாக சென்னை உட்பட கோவை, திருச்சி, நெல்லை என பல்வேறு முக்கிய நகரங்களில் தங்கியுள்ள வெளிமாவட்ட மக்கள், தீபாவளி திருநாளை கொண்டாட சொந்த ஊர் செல்வதற்காக கார், ரயில், பஸ், மற்றும் விமானங்களில் முன்பதிவு செய்து செல்வது வழக்கம். இச்சூழலில் தீபாவளிக்காக சொந்த ஊருக்கு பயணம் செய்வோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வரும் சனிக்கிழமை அதாவது ஜூன் 29ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளியைக் கொண்டாட சொந்த ஊர் செல்ல திட்டமிட்டுள்ளவர்கள், ஜூன் 29ம் தேதி முதல் ரயில் டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுவாகவே ரயில் டிக்கெட் முன் பதிவு செய்வோர், 120 நாட்களுக்கு முன்னதாக தான் முன்பதிவு செய்ய முடியும். அந்த வகையில் அக்டோபர் 27ம் தேதி ரயிலில் செல்ல ஜூன் 29ம் தேதியும், அக்டோபர் 21ம் தேதி ரயிலில் செல்ல நேற்றும், 22ம் தேதி ரயிலில் செல்ல இன்றும், 23ம் தேதி ரயிலில் செல்ல நாளையும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதையடுத்து 21ம் தேதி ரயிலில் செல்ல நேற்று காலை 8 மணி முதல் முன்பதிவு தொடங்கியது. மேலும் நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய முன்பதிவு இரவு 8 மணி வரை நடந்தது. தெற்கு ரயில்வே இணையதளத்தில் ஜூன் 29 காலை 8 மணி முதல் டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ளலாம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!