பேரம் பேசிய பெண் அதிகாரி கைது

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த மோசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துராஜ். இவர், தன்னுடைய நிலத்தை வரை முறைப்படுத்தி சான்றிதழ் பெறுவதற்காக அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அங்கு பணியிலிருந்த துணை வட்டார வளர்ச்சி பெண் அதிகாரி ஜீவா (57), நிலத்தை வரை முறைப்படுத்தி சான்றிதழ் வழங்க 86 ஆயிரம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத முத்துராஜ், வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் அளித்தார். துணை வட்டார வளர்ச்சி அலுவலரைப் பொறிவைத்து பிடிப்பதற்காக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்துராஜிடம் கொடுத்து அனுப்பினர். அவரும் பணத்தை எடுத்துச் சென்று துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவை, அரக்கோணம் ரயில் நிலையம் அருகே வரவழைத்து அந்தப் பணத்தை லஞ்சமாகக் கொடுத்தார். அப்போது, அங்குச் சாதாரண உடையில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், அதிகாரி ஜீவாவை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர். இந்தச் சம்பவம் அரக்கோணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)