மண்ணெண்ணையை ஊற்றி, தற்கொலைக்கு முயன்ற நிலையில்,

சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த தங்கராஜ், நுங்கம்பாக்கம் பகுதியில் உணவு விடுதி நடத்தி வருகிறார். இவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மண்ணெண்ணையை ஊற்றி, தற்கொலைக்கு முயன்ற நிலையில், அருகில் இருந்த பொதுமக்களும் காவல்துறையினரும், தண்ணீர் ஊற்றி அவரைக் காப்பாற்றினர். இது குறித்து கூறிய தங்கராஜ், தமது உணவகத்தின் மேம்பாட்டிற்காக 2017ஆம் ஆண்டு, கண்ணன் என்பவரிடம் 3 லட்சம் ரூபாய் கடனாக பெற்றதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் கடன் மற்றும் வட்டியுடன் சேர்த்து நான்கரை லட்சம் ரூபாய் வரை திருப்பி செலுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், கடனை முழுவதும் செலுத்திய பிறகும் கண்ணன் தமது உணவகத்தை அபகரித்து, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை எடுத்து சென்றதாக தெரிவித்த அவர், இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று தெரிவித்தார். இது குறித்து கேள்வி கேட்டபோது, நுங்கம்பாக்கம் காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, சிவில் வழக்காக மாற்றி, தம்மை மிரட்டி, துரத்தி விட்டதாக குற்றம் சாட்டிய தங்கராஜ், உரிய நடவடிக்கை எடுத்து கடையை மீட்டுத்தர கோரிக்கை விடுத்தார்...*


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)