அம்பத்தூர் பகுதி கள்ளிப்குப்பம் தாங்கல் குளமானது புலன் எண் 721, சுமார் 18 ஏக்கர் நீர்நிலைப் பகுதிகளில் காப்பாற்றப்படுமா????

சென்னை மாவட்டம் அம்பத்தூர் வட்டம், கொரட்டூர் கிராமம், அம்பத்தூர் வட்டாட்சியர் மற்றும் பெரு நகர மாநகராட்சி மண்டல 7, அம்பத்தூர், பகுதி வார்டு 82 அமைந்துள்ள நீர்நிலை பகுதியான புலன் எண்: 711, சுமார் 18 ஏக்கர் நிறைந்த நீர் நிலை பகுதி மற்றும் நீர் வழிபாதை கள்ளிப்குப்பம் தாங்கல் குளமானது தற்போது முழு ஆக்கிரமிப்பில் உள்ளது. மேலும் சில சமூகவிரோதிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களால் சூறையாடப்படுகிறது மேலும் கள்ள/ போலி பத்திரம் தயாரித்து போலி எஸ் எல் ஆர் பட்டா (SLR PATTA) உருவாக்கி வீட்டுமனை கட்டுவதற்கு உண்டான நிலைபாடுகளை வரையுகபடுத்தி ஆணி கற்களை ஊன்றி வைத்து அதிக விலைக்கு பிளாட் போட்டு விற்பனை நடைபெறுகிறது. இதனை உடனடியாக அரசு அதிகாரிகள் தமிழக அரசு பொறுப்புள்ள முதன்மை அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் வகையில் (வருவாய் துறை & சார்பு பதிவாளர் அலுவலர்கள்) இணைந்து போலி பத்திரம் தடுக்கும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து (MANUAL N.O.C Confirmation Patta) தபால் மூலமாக அனுப்பப்படும் உண்மை தன்மை சான்றிதழை (Genius Certificate) வருவாய் துறை அலுவலகம் அல்லது வருவாய்த்துறை வட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து அனுப்பும் போது ( email box) இ-மெயில் அஞ்சல் முகவரி வழி மூலமாக உண்மை தன்மை சான்றிதழ் வழங்கி வந்தால், கள்ள பத்திரம் & போலி (SLR PATTA MANUAL) பதிவு செய்வதை தடுக்கலாம் என்பது பகுதி மக்கள், நீர் நிலை ஆர்வலர், சமூக ஆர்வலர், RTI ஆர்வலர்களின் கருத்து. தாமதம் ஏற்படும் பட்சத்தில் தற்போது உள்ள உள்ளூர் நில மோசடி இடத்தரகர்கள் தாமாகவே (FAKE MANUAL PATTA GENENIS CERTIFICATE) தயாரித்து சார்பு பத்திரப்பதிவு அலுவலகத்தில் ( SUB- REGISTRAR OFFICE) அலுவலகத்தில் போலி பத்திர வருவாய் ஆவணங்களை இணைத்து பத்திர பதிவு செய்து வருகிறார்கள் என்பது உண்மை. அரசு இந்த இடத்தை திறம்பட கையகப்படுத்தி மேலும் குடிநீர் தட்டுப்பாடு நிலையை மாற்றி அதற்குண்டான வழிவகை செய்யும் நிகராக ஈடாக இவ்விடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கும் நீர்நிலை பகுதியை மேன்மைய்ப்படுத்தி, தூர்வாரிட, தடுப்பு அணை, வேலிகள், எச்சரிக்கை அறிவிப்பு பலகை அமைக்க பொதுநலன் கருதி கோரிக்கை வைக்கிறேன். RTI RAMESH W.M.C.O RTI ACTIVIST CHENNAI DISTRICT AMBATHUR


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)