பொதுமக்களுக்கான குடிநீர் தனியாருக்கு விற்பனை

பல்லாவரம் நகராட்சியில் அதிகாரிகள் துணையுடன் ஆளும்கட்சியினர் மீது குற்றச்சாட்டு தாம்பரம், ஜூன் 29: பல் லாவரம் நகராட்சி மூலம் பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய குடிநீரை அப்ப குதி ஆளும் கட்சியினர் வணிக வளாகங்கள் மற் றும் ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வரு கின் ற னர். இதற்கு நகராட்சி அதிகாரிகளும் உடந்தையாக உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட் டியுள்ளனர். பல்லாவரம் நகராட்சி யில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளன. இங்கு, பல்லாயி ரக்கணக்கான மக்கள் வசிக் கின்றனர். இவர்களுக்கு, நக ராட்சி நிர்வாகம் சார்பில் பொது குழாய்கள் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வரு கிறது. இந்நிலையில், கோடை காலம் தொடங்கியதால் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் இப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இதையடுத்து, நகராட்சி பகுதிகளில் உள்ள பொது கிணறுகளில் இருந்து நகராட்சிக்கு சொந்தமான டேங்கர் லாரிகள் மற்றும் தனியார் ஒப்பந்த லாரி கள் மூலம் குடிநீர் பெற்று, பொதுமக்க நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, அனைத்து வார்டுகளுக்கும் வழங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சி சார்பில் டேங் கர் லாரி மூலம் பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீரை, ஆளும்கட்சியை சேர்ந்த லாரி ஒப்பந்ததா ஓங்க ரர்கள், விதிமீறி தனியார் வணிக வளாகங்கள் மற் றும் ஓட்டல்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் போதிய குடிநீரின்றி தவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்லாவரம் திமுக எம்எல்ஏ இ.கருணாநிதியிடம் பாதிக் கப்பட்ட மக்கள் புகார் தெரி வித்தனர். இதையடுத்து, மக் களுக்கு முறையான குடிநீர் வழங்காததனியார் ஒப்பந்த தாரர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் ரது மனைவி மற்றொரு போலீசார் அறையில் இருந்துள்ளார். சுந்தரம் வீட்டை சிறுமி அலறியதால், சத் கத்தின்பேரில் தம் கேட்டு யாராவது வந்து செய்த போது பினாயில் பொதுமக்கள். விடுவார்களோ என பயந்த வாடை வந்ததை என நகராட்சி ஆணையரி டம் இ.கருணாநிதி எம்எல்ஏ வலியுறுத்தினார். இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தின் நடவடிக் கைக்கு பயந்த ஆளும்கட் சியை சேர்ந்த லாரி ஒப்பந்த தாரர்கள், அஸ்தினாபுரம் பேருந்து நிலையம் அருகே, தி மு க வி ன ரின் நட வ டிக்கையை கண் டித்து போராட்டம் நடத்துவது போல நாடகமாடினர். இத னால் பல்லாவரம் நகராட் சியில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட் டது. இதையடுத்து தனியார் ஒப் பந்த லாரி உரி மை யாளர்களிடம் நகராட்சி உதவி பொறியாளர் வெங் கடேசன் சமரச பேச்சு வார்த்தை நடத்தினார். இதன் பிறகு போராட்ட டத்தை கைவிட்டு தனியார் ஒப்பந்ததாரர்கள் கலைந்து சென்றனர். இந்த முறைகே டான குடிநீர் வினியோகத் தில் நகராட்சி அதிகாரிக ளுக்கு மறைமுக தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. என வே, இப் பி ரச் னைக்கு மாவட்ட கலெக் டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பொதுமக் கள் கூறுகையில், “நகராட்சி நிர்வாகம் சார்பில் பொது மக்களுக்கு வழங்க வேண் டிய குடிநீரை, ஆளும்கட்சி யினர் விதிமீறி தனியாருக்கு அதிக விலைக்கு விற்று பணம் சம் பாதிக்கின்ற னர். இது பற்றி பலமுறை நகராட்சி நிர்வாகத்தில் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. மாறாக, ஆளும் கட்சியினரின் அடாவடி செயலுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றனர். குடிநீ நன்றி தவிக்கும் மக்களுக்கு அரசு வழங்கும் குடிநீரை ஆளும்கட்சியினர், தனியா ருக்கு விற்பதால், போதிய குடிநீரின்றி தவித்து வருகி ( பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும்,” என்றனர். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்