பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி
பிரதமர் மோடி பிரிக்ஸ் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: பயங்கரவாதம். மனித இனத்துக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது. இதனால் அப்பாவி மக்களின் உயிரிழப்புகள் மட்டும் ஏற்பட வில்லை. மனிதத்துவம், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றையும் பாதிக்கிறது. எனவே பயங்கரவாதத்தை ஒழிக்க அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுக்க வேண்டும். எனவே பயங்கரவாதத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டியது மிக அவசியம் என்று தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒன்றிணைய ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 உச்சி மாநாடு வெள்ளிக்கிழமை (ஜூன் 28) தொடங்கி இருநாள்கள் நடைபெறுகிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை ஜி20 உச்சி மாநாடு தொடங்குவதற்கு முன்பாக அறிவிக்கப்படாத பிரிக்ஸ் மாநாடு நடைபெற்றது. இதில் பிரேஸில் அதிபர் ஜெய்ர் பால்சோனரோ, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின், பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சைரில் ரமபோஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.