மக்கள்... அரசு அதிகாரியின் செயலால் அடி உதை!!!

தமிழ்நாடு முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம், மொத்தக்கல் கிராமத்திற்கு அரசு சாதனைகளை விளக்கும் எல்.ஈ.டி. திரை பொருத்தப்பட்ட வண்டி சென்றுள்ளது. அங்குசென்றபின் வண்டியை நிறுத்திவிட்டு அதிலிருந்த ஊழியர்கள் அரசின் சாதனைகளை விளக்கும், அந்த பதிவை இயக்கியுள்ளனர். ஏற்கனவே தண்ணீருக்கு அல்லாடிக்கொண்டிருக்கும் அந்த மக்கள், இந்த சாதனை விளக்கங்களை பார்த்துவிட்டு, மேலும் கோபமாகியுள்ளனர். இங்கு நாங்கள் தண்ணீர் இல்லாமல் எவ்வளவு அவதிப்படுகிறோம், நீங்கள் சாதனை படம் காட்றீங்களா எனக்கூறியுள்ளனர். அதற்கு செய்தி மக்கள் தொடர்புத்துறை ஊழியர் அதிகாரிகள் சொல்கிறார்கள் நாங்கள் செய்கிறோம் எனக்கூறி அந்த காணொலியை ஒலிபரப்பியுள்ளனர். இதனால் மேலும் ஆத்திரமடைந்த மக்கள் அந்த ஊழியர்களை தாக்கினர். மேலும் அந்த வாகனத்தையும் பொதுமக்கள் சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.காவல்துறைக்கு இந்த விஷயம் தெரியவர, அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பொதுமக்கள் அவர்களிடம், தண்ணீர் வந்து 6 மாதங்களாகிவிட்டது. பிறகு எதற்கு இந்த சாதனை விளம்பரம் என கேள்வி எழுப்பினர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்திய காவல்துறையினர் அந்த வாகனத்தையும், அந்த ஊழியர்களையும் மீட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)