ஆழ்துளை கிணற்றைஆட்டையை போட்ட பொதுப்பணித்துறையில் AE

ஆழ்துளை கிணற்றை ஆட்டையை போட்ட ராஜராஜேஸ்வரி.... தேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறையில் AE ஆகபணியாற்றி வருபவர் ராஜராஜேஸ்வரி. அரசு மருத்துவமனைகள் மற்றும் அதனை சார்ந்த கட்டிட பணிகளை ஒப்பந்த அடிப்படையில் இவரது மேற்பார்வையின் கீழ் கட்டிட பணிகளை மேற்கொண்டு வருவது வழக்கம்.அவ்வாறு அரசு மருத்துவமனை மற்றும் அதனைச்சார்ந்த கட்டிடங்களில் கட்டிட மதிப்பைக் காட்டிலும் அதிகமாக தொகைக்கு டெண்டர் விடப்பட்டு போதிய கமிஷன் பெற்றுக்கொண்டு ஏதோ பெயரளவிற்கு சரியில்லாத கட்டிடங்களை கட்டிக்கொடுத்து துருகின்றார். இவர் பணியாற்றியது முதல் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் இவரது மேற்பார்வையின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்கள் யாவும் உறுதி தன்மையற்றதாக காணப்படுகின்றது . பூதிப்புரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் வேலை. ஆரம்பம் கலவை சரியில்லாத காரணத்தால்இவரது மேற்பார்வையின் கட்டப்பட்ட கட்டிடம்.மேலும் இவரது மேற்பார்வையின் கிழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழும் சூழலில் உள்ளது என்றே கூறலாம் .அந்த அளவிற்கு முறையான கலவைகள் அல்லாமல் பெயரளவிலேயே வேலை என்று கமிஷன் அடிப்படையில் வேலை வாங்கி விட்டு விபத்து ஏற்படுத்தும் வகையில் கட்டிடங்களை கட்டி முடித்திருக்கின்றனர். கமிஷன் அடிப்படையில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை EE புவனேஸ்வரன் ஆய்வு செய்வது கிடையாது. இதனால் போலியாக கணக்கு காட்டி பெரிய அளவிலான தொகையில் முறைகேடு செய்துள்ளார். அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ளாததன் காரணமாகவே பல்வேறு முறைகேடுகள் ஏற்படுகின்றன என்றே கூறலாம். கடந்த 2013_2014நிதியாண்டில் பெரியகுளம் அரசுமாவட்ட தலைமை மருத்துவ மணையில் 200 செவிலியர் மாணவர்களுக்கான விடுதி கட்டும் பணி ரூ7.50 கோடியில் ஒப்பந்தகாரர் பொன்னுச்சாமி என்பவரால் பணி எடுக்கப்பட்டு 2015-2016ல் பணி நிறைவு செய்து முடிக்கப்பட்டுள்ளது. அந்த பணிக்கு ஆழ்துளைகிணறு போடும் போது ஒரு bore மண் மூடிக் கொண்டது. பிறகு வேறோர் இடத்தில் 300 அடியில் போர் போடப்பட்டு நல்ல நிலையில் உள்ளது . இந்நிலையில் அடுத்த பணியாக 2017-2018ல் செவிலியர் தங்கும் விடுதியில் மேல் தளம் கட்டும் பணி 1.27கோடியில், தளம்கட்டும் பணிக்கு அரசு ஒப்புதல் தந்து அமிதாப்பச்சன் என்பவரால் பணி மேற்கொள்ளப்பட்டது.இந்த வேலையில் மற்ற பணிகளை செய்து முடித்து விட்டு borewell போடும் போது 2 வருடங்களுக்கு முன்பு மணல் மூடிய bore யை ரூபாய் 500/-க்கு டிராக்டர் விட்டு 30 அடியில் உள்ள மணலை அகற்றி விட்டு, பழைய ஆழ்துளை கிணற்றை கணக்கு காட்டி ரூபாய்1.20 லட்சத்திற்க்கு புதிதாக borewell போட்டதாக போலியாக ஒரு அளவை எழுதி மார்ச் 2019ல் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு உள்ளது. இப்பொறியாளர் திருமதி அ. ராஜ ராஜேஸ்வரி AEயை தொடர்பு கொண்டு கேட்ட போது,அவர் புதிதாக bore போடவில்லை என்றும் பழைய bore யை flush பண்ணி மட்டும் விட்டோம் என்றும் கூறினார். அவர் கூறுவது போல் flush மட்டும் பண்ணுவதற்கு எப்படி 1.20 லட்சம் செலவாகும்? மக்கள் பணம் தானே, கேள்வி கேட்க யார் உள்ளனர்? என்ற எண்ணத்தில் விரையம் செய்கின்றாரா? புவனேஸ்வரன்EEக்கு போதிய கமிஷன் செல்வதால் இவர் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டிடப் பணிகளுக்கு ஆய்வுகள் மேற்கொள்வது இல்லையா? உயிர் பலிகள் ஏற்படும் முன் இவரது அ.ராஜராஜேஸ்வரி.AE மேற்பர்வையில் கீழ் நடைபெற்ற கட்டிடப்பட்ட கட்டிடங்களின் உறுதித் தன்மையை கண்டறிய ஆய்வுகள் மேற்கொள்வார்களா? நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது என்று கூறி வரும் நம் நாட்டுத் தலைவர்கள் மத்தியில் இளம் பொறியாளர் அ.ராஜராஜேஸ்வரி.AE. போன்றோரின் செயல் தலைகுனிவு ஏற்படுத்தும் வகையில் உள்ளது.(AE ) ( EE ) புவனேஸ்வரன் புகைப்படத்துடன் அடுத்தஇதழில் முழு விவரத்துடன் எதிர்பார்ப்போம் இவன் சாதிக்பாட்சா நிருபர் தேனி மாவட்டம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்