போலிATM அட்டை கொடுத்து ஏமாற்றி நம்பர் கைது

27.06.19 திண்டுக்கல் மாவட்டம்* ஒட்டன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள SBI ATM ல் கள்ளிமந்தையத்தைச் சேர்ந்த  பெரியசாமி(42) என்பவர் பணம் எடுக்கும் பொழுது மர்ம நபர் ஒருவர் தான் பணம் எடுத்து தருவதாக கூறி போலி ATM அட்டையை கொடுத்து ஏமாற்றி உள்ளார். இது தொடர்பாக பெரியசாமி கொடுத்த புகாரின் அடிப்படையில் *ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. சீனிவாசன் அவர்கள்* வழக்கைப் பதிவு செய்து இது குறித்து விசாரணை செய்ய உதவி ஆய்வாளர் திரு.இலங்கேஸ்வரன் தலைமையில் குற்றப்பிரிவு காவலர்கள் HC 1634 திரு.சீனிவாசன் Gr.I-Pc 174 திரு.வேளாங்கண்ணி ரவுடிகள் தடுப்பு பிரிவு Gr.I.Pc 384 திரு.பிரபாகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டு அங்கு உள்ள CCTV கேமரா பதிவுகளை சோதனை செய்தும் மேலும் அவர் கொண்டு சென்ற ATM கார்டை சோதனை செய்ததில் அவர் திண்டுக்கல் பூர்விகா மொபைல்  கடையில் ATM கார்டை பயன்படுத்தி ரூ.30,000 மதிப்புள்ள 3 மொபைல்கள் வாங்கி கொண்டு சென்றுள்ளார். அவர் கொடுத்த ஆதார் அட்டையின் மூலம் விசாரணை செய்தபோது அவர்  *திண்டுக்கல் புகையிலைப்பட்டியைச்  சேர்ந்த* பன்னீர்செல்வம்(24) என்பவர் என தெரிய வந்து அவரை *பிரிவு 454, 380 IPCன்* படி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர் மீது திண்டுக்கல்லில் பல்வேறு காவல் நிலையங்களிலும் கரூர் காவல் நிலையத்திலும் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)