உள்ளாட்சி பதவிக்கு போட்டியிட வேண்டிய தகுதிகள்

ஊராட்சி தலைவர் பதவியிடத்திற்கோ, உறுப்பினர் பதவியிடத்திற்கோ, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கோ போட்டியிடுவதற்கு கீழ்க்கண்ட  தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் மற்றும் கீழே குறிப்பிடப்பட்டுள்ள  தகுதியின்மை எதனையும் பெற்றிருக்க கூடாது.  தகுதி  (அ) நீங்கள் எந்த ஊராட்சி அமைப்பின் உறுப்பினராக அல்லது தலைவராக போட்டியிடவிரும்புகின்றீர்களோ, அந்த ஊராட்சி அமைப்பின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கிராம ஊராட்சி வார்டின் உறுப்பினர் பதவியிடத்திற்கு நீங்கள் போட்டியிட்டால், அந்த கிராம ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று நீங்கள் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால், உங்கள் பெயர் தொடர்புடைய ஊராட்சிஒன்றியத்தின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவது இடம் பெற்றிருக்க வேண்டும்.அதேபோன்று நீங்கள் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு போட்டியிட்டால்,உங்கள் பெயர் அந்த மாவட்ட ஊராட்சியின் வாக்காளர் பட்டியலில் எந்த ஒரு வார்டிலாவதுஇடம் பெற்றிருக்க வேண்டும். வேட்பாளர் கையேடு 3  (ஆ) வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாளன்று நீங்கள் 21 வயது நிரம்பியவராகஇருக்க வேண்டும்.  (இ) ஒதுக்கீடு செய்யப்பட்ட தலைவர் பதவியிடத்திற்கோ அல்லது உறுப்பினர்பதவியிடத்திற்கோ நீங்கள் போட்டியிட்டால் அந்த பதவியிடம் எந்த பிரிவினருக்கு (வகுப்பினர் அல்லது பெண்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோ அந்த பிரிவினைச் சார்ந்தவராகவோ அல்லது அந்த வகுப்பினைச் சார்ந்தவராகவோ அல்லது அப்பிரிவின் பெண்ணாகவோ இருத்தல் வேண்டும். உதாரணமாக, ஒரு இடம் ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால் நீங்கள் ஆதி திராவிடர் வகுப்பினரைச் சேர்ந்தவராகவும், பெண்ணாகவும் இருக்க வேண்டும். அதே போன்று பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவ்வகுப்பைச் சேர்ந்த பெண்கள்தான் போட்டியிட இயலும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொது (பெண்கள்) என ஒதுக்கப்பட்ட இடத்தில் பெண்கள் (அனைத்து வகுப்பைச் சார்ந்த பெண்களும்) மட்டுமே போட்டியிடலாம்.  2.2. தகுதியின்மை தகுதியின்மை தகுதியின்மை   கிராம நிர்வாக அலுவலராகவோ அல்லது கிராமப் பணியாளராகவோ மற்றும் எந்த ஒருஊரக அல்லது நகர்ப்புற அல்லது தொழில் நகரங்கள் அல்லது பாளையம் (கண்டோன்மென்ட்) ஆகிய உள்ளாட்சி அமைப்பைச் சார்ந்த அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ அல்லது அரசு சார்புடைய நிறுவன பணியாளராகவோ அல்லது அலுவலராகவோ அல்லது மத்திய, மாநிலஅரசு அலுவலராகவோ அல்லது பணியாளராகவோ இருக்கக்கூடாது.  இந்திய அரசில் அல்லது ஏதேனும் மாநில அரசில் பதவி வகித்திருந்து லஞ்சம் அல்லதுஅரசுக்கு துரோகம் இழைத்ததற்காக பணியறவு (னுளைஅளைளயட) செய்யப்பட்ட நாளிலிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு போட்டியிட தகுதியற்றவர் ஆவார்.  1955-ம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (ஞசடிவநஉவiடிn டிக ஊiஎடை சுiபாவள ஹஉவ, 1955) தண்டனை பெற்றவராக இருக்கக்கூடாது.  மேலும், வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளன்று 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடுஊராட்சிகள் சட்டம், பிரிவு 37 (1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு சட்டங்களின் கீழ், ஒருவர் 4 ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் – 2016நீதிமன்றத்தால் குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டிருப்பின் அத்தகைய தண்டனை / தீர்ப்பு ஆனது – (அ) அபராதம் மட்டுமிருப்பின் - குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்து ஆறு வருடகாலத்திற்கு தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் ஆவார். (ஆ) அத்தகைய தீர்ப்பு சிறை தண்டனையாக இருப்பின், தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறைத் தண்டனை முடிந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தொடர்ந்து தகுதியற்றவர் ஆவார்.  மேற்படி சட்டப்பிரிவு 37 (1)-ன்படி தெரிவிக்கப்பட்ட குற்ற செயல்களை தவிர வேறு ஏதேனும் குற்ற செயலுக்காக குற்றவாளியென தீர்ப்பளிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனை அடைந்தவர், அவ்வாறு குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நாளிலிருந்தும் மற்றும் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் ஆறு ஆண்டுகளுக்கு தகுதியற்றவர் ஆவார்.  மேலும், பட்டியல் வகுப்பினர் அல்லது பட்டியல் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டபதவியிடங்களில் அவ்வகுப்பைச்சாராதவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, மேற்படி சட்டப்பிரிவு 38 (3) (ந)-ன் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் அவ்வாறு தகுதி நீக்கம் செய்யப்பட்டநாளிலிருந்து ஆறு ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேலும்,(அ) மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது.(ஆ) பெற்ற கடனை தீர்க்க வகையற்றவர் என மனு செய்துள்ளவராகவோ அல்லது உரியநீதிமன்றத்தில் அவ்வாறு தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பவராகவோ இருக்கக் கூடாது.  (இ) நீங்கள் எந்த ஊராட்சி யில் உறுப்பினராக அல்லது தலைவராகப் போட்டியிடவிரும்புகிறீர்களோ அந்த ஊராட்சியுடன் மற்றும் எந்த ஒரு ஊராட்சியுடனும் எந்த ஒருவேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது.  ஊராட்சி என¦பது கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன¦றியம் மற¦றும் மாவட்ட ஊராட்சியினை குறிக்கும். வேட்பாளர் கையேடு 5 (ஈ) ஊராட்சியின் சம்பளம் பெறும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ அல்லது ஊராட்சிக்கு எதிராக வழக்கு நடத்தும் சட்ட தொழில் ஆற்றுநராகவோ பணியமர்த்தப்பட்டிருக்கக் கூடாது. (உ) முந்தைய ஆண்டு வரை ஊராட்சிக்கு கொடுக்க வேண்டிய எந்த வகையான நிலுவையும்வைத்திருக்கக் கூடாது. (ஊ) தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், 1994-ன் எந்த ஒரு பிரிவின் கீழும் மற்றும் விதிகளின்படியும் தகுதி அற்றவராக நீங்கள் இருக்கக்கூடாது. (எ) தேர்தல் குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டிருக்கக் கூடாது.   உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதற்கான தேர்தல் செலவினக் கணக்குகளை உரியகாலத்திற்குள் தாக்கல் செய்யாததால், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் தேர்தலில் போட்டியிட மூன்று ஆண்டுகளுக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பின், அத்தகைய தகுதி நீக்க ஆணை பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து மூன்று ஆண்டுகளுக்கு போட்டியிடத் தகுதியற்றவர் ஆவார். மேற்கண்ட இனங்களுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி வகிப்பது பின்னர் அறியவரின், அவர் மீது 1994-ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம், பிரிவு 41-ன்கீழ் தகுதி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்