கொள்ளையர்களின் பிடியில் கும்பக்கரை

இயற்கை எழில் கொஞ்சும் தேனி மாவட்டத்தின் முக்கிய அருவியாக கும்பக்கரை அருவி விளங்குகின்றது. கொடைக்கானல் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக மலைகளின் ஊடே சலசலத்துச் சென்று கும்பக்கரையில் அருவியாக கொட்டுகின்றது. இந்த அருவியைக் கான நமது மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து வருகின்றனர். அருவியை கண்டு ஒசிக்க வனத்துறை சார்பில் ஒவ்வொரு நபருக்கும் நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டு வருகின்றது. நுழைவுச் சீட்டு வாங்கி சுமார் அரை கிலோ மீட்டர் வரை சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு வெறுமனே ஆட்கள் மட்டும் அருவியைக் காண அனுமதிக்கப்படுவர். அருவியில் நீர்வரத்து உள்ள காலங்களில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 1500 வரையிலான நபர்கள் அருவியைக் கண்டு ரசித்து செல்கின்றனர். அருவியை காண வரும் சுற்றுலாப் பயணிகளது சாப்பாட்டினைக் கூட அருவி பகுதிக்குள் கொண்டு செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை. இங்கு நுழைவுக் கட்டணங்களின் மூலம் பெறப்படும் வசூல் தொகையில் கையாடல் நடைபெறுவது வழக்கமாய் உள்ளது. நபர் ஒன்றுக்கு 15 ரூ நுழைவுக்கட்டணம் பெறும் வனத் துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தராதது சுற்றுலாப் பயணிகளை முகம் சுழிக்க வைக்கின்றது. இங்கு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து இன்று வரை சரி செய்யப்படாமல் சுற்றுலாப் பயணிகளுக்கு குடிக்க தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. பராமரிப்பு இல்லாத கழிப்பறைக்கு அதிகமான கட்டணம் வசூல் செய்து வருகின்றனர்.இக்கும் பக்கரை அருவிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையான, முறையான அடிப்படை வசதி, பேட்டரி கார் வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தித் தந்தால் இன்னும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும், மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆனந்தமாய் குளித்து மகிழ்ந்து வரும் வழுக்கைப் பாறை வரை சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. வனத்துறையில் தற்காலிகமாக பணிபுரிந்து வரும் நபர்கள் அருவி கண்காணிப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் உயிர்ப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இன்னும் கூடுதலாக தற்காலிகப் பணியாளர்களை நியமித்து அருவிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் உயிர்ப் பாதுகாப்பை உறுதி செய்து அருவியின் முழு அழகையும் கண்டு ரசிக்க வழிவகை செய்ய வேண்டுமாய் கோரிக்கை எழுந்துள்ளது. இங்கு பணிபுரிந்து வரும் வாட்சர் ஆறுமுகம் போன்றோரை (தவறு செய்வோரை, சுற்றுலா பயணிகளை மிரட்டி ஆதாயம் தேடுவோரை ) பணி நீக்கம் செய்து தகுதி வாய்ந்த நபர்களை நியமனம் செய்து வன அலுவலர் சுரேஷ் நடவடிக்கை மேற்கொண்டு கும்பக்கரை அருவியை சார்ந்து நடைபெற்று வரும் பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.தேவதானப்பட்டி அருகே உள்ள ரேஞ்சர் அலுவலகத்தில் அலுவலக நேரம் மட்டும் அல்லாது இரவு நேரங்களிலும் அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வது பொது மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. பாலியல் சம்மந்தமான தவறுகள் நடந்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகின்றது. இச் சரகத்திற்கு கட்டுப்பட்ட வன பகுதிகளில் அதிக அளவில் மரங்கள் வெட்டப்படுவதாகவும் அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதற்காக அதிகாரிகளுக்கு கப்பம் கட்டுவதாகவும் கூறி வருகின்றனர். இச்சரகத்தின் கீழ் அதிக அளவு பணம் புழங்குவதால் கையாடலும் அதிக அளவில்நடைபெறுகின் றதாம். தேனி மாவட்டம் பெரியகுளம் மேற்கு தொடர்சிமலை தேவதானப்பட்டி வனசரகத்திற்க்கு உட்பட்ட கல்லாறு, கும்பக்கரை, செலும்பு ஆறு ஆகியவற்றின் அருகே உள்ள வனப்பகுதியில் 3 முதல் 5 கிலோமீட்டார் தூரம் மேலே சென்று, மலைப்பகுதியில் உள்ள ஓடைபகுதியில் இருந்து ஆர்ப்பரித்து வரும் நீரை 100க்கும் மேற்பட்ட இடங்களில் பைப் மூலம் நீரை எடுத்து அந்த பகுதியில் உள்ள ஒரு சில செல்வாக்கு மிக்க நில உரிமையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஓடையில் வரும் நீர் ஆங்காங்கே தடுத்து நிறுத்தப்படுவதால் கீழே உள்ள சிறு விவசாயிகளுக்கு தண்ணிர் கிடைக்காமல் போவதோடுவிவசாயம் பாதிக்கப்படுவதாகவும், சிறு குறு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். வனப்பகுதியில் உள்ள நீரை பைப் மூலம் எடுத்து விடுவதால் காட்டுமாடு, மான், பன்றி, சிறுத்தை, உள்ளிட்ட வனவிலங்குகள் நீர் தேடி அருகே உள்ள விளை நிலங்களில் தஞ்சம் புகுந்து விளை பொருட்களையும் சேதப்படுத்துவதுடன், விவசாயிகளின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் ஓடைகளில் பைப் மூலம் நீர் எடுப்பதை வனத்துறையினர் தடுத்து வந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக அதை கண்டு கொள்ளாமல் இருக்க வனத்துறை அதிகாரிகள் ஆண்டு ஒன்றுக்கு நீர் எடுக்கும் விவசாயிகளிடம் 5000 ரூபாய் முதல் 10000 ரூபாய் வரை பெற்றுகொள்வதாகவும் அந்த பகுதியில் உள்ள விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும் வனத்தையும் வனவிலங்குகளை காப்பாற்றவும் வன விலங்குகளுக்கு தேவையான நீரை பாதுகாத்து வன விலங்குகள் விவசாய நிலங்களுக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பணம் கையாடல் மற்றும் முறைகேடு, மரக் கடத்தல், தண்ணீர் திருட்டில் ஆதாயம், வன விலங்கு பாதுகாப்பின் மை போன்ற பல்வேறு செயல்களினால் கொள்ளையர்களின் பிடியில் கும்பக்கரை அருவி, மற்றும் வனச்சரகம் உள்ளது. கொள்ளையர்களின் பிடியில் உள்ள இவற்றை மீட்டு இயற்கையை காக்க வேண்டுமாய் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை வைக்கின்றனர். (DFO) மாவட்ட அதிகாரி நடவடிக்கை எடுப்பார்களா? கொள்ளையில் ஈடுபட்ட இவர்களை பற்றிய விபரம் அடுத்த இதழில் இவண்.Aசாதிக்பாட்சா. நிருபர்.தேனி மாவட்டம்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்