திமுகவின் அதிரடி திட்டம்!

தி.மு.க.வுக்கு 3 இடங்கள் இருக்கின்றன. ஏற்கனவே ம.தி.மு.க.வோடு தேர்தல் ஒப்பந்தம் போட்டுக்கிட்ட போதே, அந்தக் கட்சிக்கு ஒரு ராஜ்யசபான்னு முடிவானது. அதன் மூலம் ராஜ்யசபா எம்.பி.யா வைகோ டெல்லிக்குப் போவார். மிச்ச ரெண்டு சீட்டில் ஒன்றை கட்சியின் சீனியரான தொ.மு.ச. நிர்வாகி சண்முகத்துக்கு தருகிற எண்ணத்தில் ஸ்டாலின் இருக்காராம். மிச்ச ஒரு சீட்டு யாருக்குன்னு ஆலோசிச்சப்ப, நடந்து முடிந்த தேர்தலில் இஸ்லாமிய சமூகம் முழுமையா தி.மு.க.வை ஆதரித்திருப்பதால், அந்த சமூகத்தின் வாக்கு வங்கியை பலப்படுத்திக்கொள்ளவும், நாடாளுமன்றத்தில் அந்த சமூகத்துக்குப் பிரதிநிதித்துவம் தரும் வகையிலும், இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த அனுபவமுள்ள சீனியர் ஒருவருக்கோ அல்லது சுறுசுறுப்பான ஜூனியர் ஒருவருக்கோ அந்த சீட்டைக் கொடுக்கலாமாங்கிற விவாதமும் தி.மு.க.வுக்குள் நடந்திருக்கு. 1999-ல் பா.ஜ.க.வோடு தி.மு.க. கூட்டணி வச்சப்ப விலகத் தொடங்கிய முஸ்லிம் வாக்கு வங்கி மறுபடியும் இந்த முறை தி.மு.க.வுக்கு சாலிடா திரும்பியிருக்கு. அதற்கான பிரதிநிதித்துவம் முக்கியம் என்று திமுக கருதுவதாக சொல்லப்படுகிறது. லோக்சபாவில் தி.மு.க. சார்பில் முஸ்லிம் எம்.பி. இல்லை. அதனால ராஜ்யசபாவுக்கு நிறுத்தலாம்னு ஆலோசனை சொல்லப்பட்டாலும், கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க வாதாடி வென்ற மூத்த வழக்கறிஞர் வில்சன், இன்னொரு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் பெயரும் அடிபடுது. இதுக்கிடையில், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்நாட்டிலிருந்து எம்.பி.யாக்கணும்னு காங்கிரஸ் ஏற்கனவே தி.மு.க.கிட்ட கேட்டிருந்தது. இது தொடர்பான பேச்சு வார்த்தை இப்ப மறுபடியும் தொடங்கியிருக்கு. இது பற்றியெல்லாம் தி.மு.க மேலிடத்தில் நடக்கும் ஆலோசனையோடு, கட்சியின் இளைஞரணி பற்றிய ஆலோசனையும் எதிர்பார்ப்பும்தான் அதிகமாக இருக்குனு அறிவாலய வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்