சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் காயலான் கடைகளால் விபத்து அபாயம்

திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்படும் காயலான் கடைகளால் விபத்து அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகள் திருவொற்றியூர், ஜூன் 29: திரு வொற்றியூர், எண் ணூர், மணலி பகுதிகளில் சாலையை ஆக்கிரமித்து வைத்துள்ள காய லான் கடைகளால் விபத்து அபா யம் ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண் ணூர், மணலி போன்ற பகு திகளில் ஏராளமான காய லான் கடைகள் உள்ளன. சிறு வியாபாரிகள் சைக் கிள் மற்றும் ரிக்ஷாக்கள் மூலம் வீதிவீதியாக சென்று வீடுகளிலிருந்து பயன்படுத் தப்பட்ட பேப்பர், பழைய பிளாஸ் டிக், இரும்பு போன்ற பொருட்களை வாங்கி வந்து, அவற்றை இந்த காயலான் கடைக ளில் விற்று, அதன் மூலம் கிடைக்கும் வரு மானத் தில் குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இந்த காய லான் கடைகளை நடத் தும் பலர் மாநகராட் சியில் அனுமதி பெற்று, அதற் கான வரி யை யும் செலுத்தி வருகின்றனர். இந் நிலை யில், எண் ணூர் விரைவு சாலை மற் றும் மணலி சாலை யில் பலர் மாநகராட்சியில் எந்த அனு மதியும் பெறாமல், சாலையை ஆக்கிரமித்து காயலான் கடைகளை நடத்தி வரு கின் ற னர். மேலும் கடைக்குள் வைக்க வேண்டிய பழைய இரும்பு, பாட்டில்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை சாலை யோரம் மலை போல் குவித்து வைத்துள்ள னர். இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிக ளுக்கும், பொது மக்களுக் கும் சிரமம் ஏற்படுகிறது. எண் ணூர் விரைவு சாலை, ராம கிருஷ்ணா நகர் அருகே உள்ள காய லான் கடை வாசலில் ஏராளமான மது பாட்டில் களை சாலையில் குவித்து வைத்துள்ளனர். மணலி சாலை சத்தியமூர்த்தி நகர் பகுதிகளிலும் சாலையை ஆக்கிரமித்து காயலான் கடைகளின் பொருட்கள் வைக் கப் பட் டுள் ள ன. இதனால், போக்குவரத் துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமப்ப டுகின்றனர். இதுகுறித்து பொதுமக் கள் கூறுகையில், "மாநக ராட் சி யி ல் அ னு ம தி பெறாமல் பலர் சாலையை ஆக்கிரமித்து காயலான் கடைகளை அமைத்துள்ள தால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை தடுக்க வேண்டிய போலீசார், மாதம்தோறும் ஒரு தொகையை பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு ஆதரவாக செயல் படு கின்றனர். இதனால், இது போன்ற ஆக் கி ர மிப்பு கடைகள் பெருகி வருகிறது. சாலையோரம் பாது காப்பற்ற முறையில் உள்ள இந்த காயலான் கடைக ளால் தீவிபத்து அபா யம் உள்ளது. அவ்வாறு தீவிபத்து ஏற்பட்டால், அருகில் உள்ள கடைகள், குடியிருப்புகளும் பாதிக் கப்படும் அபாயம் உள்ளது. எனவே, இது குறித்து சம் மந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்