ஜனாதிபதி அவர்களை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடிவு!

பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட, அதிகார மையத்தில் இருக்கும் அரசியல்வாதிகளால் மிரட்டப்பட்ட, தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் தொடர்பாக... சென்னை  கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வது, பத்திரிகையாளர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்வது, அதிகார மையத்தில் இருக்கும் அதிமுக நிர்வாகிகளால் பத்திரிகையாளர்கள் தாக்கப்படுவதும், மிரட்டப்படுவதும், காவல்துறை அதிகாரிகளால் திட்டமிட்டு பத்திரிகையாளர்களை தாக்குவதும் வாடிக்கையாகி விட்டது. தமிழகத்தில் பத்திரிகை ஜனநாயகத்தை உறுதிசெய்ய வேண்டும் என்றும், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், அதிகார மையத்தில் இருக்கும் அரசியல்வாதிகள், காவல்துறை அதிகாரிகளால் மிரட்டப்படுவது, தாக்கப்படுவது தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று ஆளுநர் அவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளோம். இந்நிலையில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு மற்றும் பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போடுவது, அரசியல்வாதிகளால் மிரட்டப்படுவது, தாக்கப்படுவது தொடர்பாக ஜனாதிபதி அவர்களையும், மத்திய உள்துறை செயலாளர் அவர்களை சந்தித்து மனுகொடுக்க சென்னை பத்திரிகையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகம் முழுவதும் தாக்குதலுக்குள்ளான பத்திரிகையாளர்கள், பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகளால் தாக்கப்பட்ட, மிரட்டப்பட்ட பத்திரிகையாளர்கள், அதிகாரமையத்தில் உள்ள அரசியல்வாதிகளால் மிரட்டலுக்குள்ளான பத்திரிகையாளர்களின் விவரங்களை உடனடியாக அனுப்பி வைத்தால், மிகவும் உதவியாக இருக்கும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்