நிருபர் உள்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் இறப்புக்கான காரணம் என்ன? போலீசார் தீவிர விசாரணை

 தாம்பரம், ஜூன் 29: கிழக்கு தாம்பரம், திருமங்கை மன் னன் தெருவை சேர்ந்தவர் பிரசன்னா (35). இவர் தனி யார் தொலைக்காட்சியில் நிருபராக வேலை செய்து வந்தார். இவரது தாயார் ரேவதி (59), அரசு ஊழிய ராக பணி யாற்றி ஓய்வு பெற்றவர். பிரசன்னாவின் மனைவி அர்ச்சனா (32) கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசி ரியையாக வேலை செய்து வந்தார். கடந்த புதன்கிழமை நள் ளிரவு இவர்கள் வீட்டின் ஹாலில் இருந்த பிரிட்ஜ் திடீரென வெடித்து தீப் பற்றியது. அருகில் உள்ள பூஜை அறையில் இருந்த பிவிசி கதவில் தீப்பற்றி கொழுந்து விட்டு எரிந்து பின்னர் வீடு முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளது. இந்த புகையில் சிக்கி பிர சன்னா , அவரது தாய் மற்றும் மனைவி ஆகிய 3 பேரும் மூச்சு திணறி பரி தாபமாக உயிரிழந்தனர். தக வ ல றிந்து வந்த சேலையூர் போலீசார், மூவ ரின் உடலை கைப்பற்றி குரோம் பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரி சோதனைக்கு பின்னர், பெசன்ட் நகர் மயானத்தில் உறவினர்கள் இறுதி சடங்கு செய்தனர். வீட்டில் உள்ள பிரிட்ஜ் வெடித்து மூன்று பேர் உயி ரிழந்த சம்பவம் அனைவ ரிடமும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியது. எனவே இந்த விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா?, பிரிட்ஜில் இருந்து வெளி யேறிய காஸ் மூலம் பிரிட்ஜ் டதா ? என போலீசார் வெடித்து விபத்து ஏற்பட் குழம்பினர். எனவே விபத்து எப் படி ஏற் பட் டது என புனித தோமையார்மலை துணை ஆணையர் முத் து சாமி தலை மை யில் சேலையூர் காவல் நிலைய உதவி ஆணையர் சீனிவா சன், ஆய்வாளர் விஜயன் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர். அதுமட்டும் இன்றிசம்ப வம் நடைபெற்ற வீட்டில் தடய அறிவியல் நிபுணர் சோபியா தலைமையில் நிபு ணர்கள் பல மணி நேரம் ஆய்வு செய்து அங்கிருந்த பிரிட்ஜின் பாகங்கள், பூஜை அறையில் எரிந்த நிலையில் இருந்த மின் விளக்கு மற்றும் விபத்து ஏற்பட்ட இடத்தில் இருந்த பொருட்கள் என சேகரித்து தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். முதற்கட்ட விசாரணை யில், விபத்து ஏற்பட்ட போது மூன்று பேரும் மூச் சுத்திணறி வெளியே எப்படி தப்பிப்பது என்று தெரியா மல் கடுமையாக போராடி யுள்ளனர். அதற்கான நகக் கீறல்கள் வீட்டில் உள்ள சுவ ருக் குள் முழு வதும் இருந்தது தெரிந்தது. விபத் தின் போது பிரசன்னா யாருக்காவது செல்போ னில் உதவிக்கு அழைத் தாரா என்பது குறித்தும், அவருடைய செல்போன் அழைப்புகள் சம் மந்த மான தகவல்களை ஆய்வு செய்யப்போவதாகவும், பிரசன்னாவின் குடும்பத்தி னர்களிடமும் விசாரணை நடத்தவுள்ளதாகவும் போலீ சார் தெரிவித்தனர். விபத்து ஏற்பட்டு வந்த கறும் புகை யில் உள்ள கார்பன் துகள்கள் இறந்த வர் க ளது வாய், மூக்கு, தொண்டை , குடல், சுவா சக்குழாய் ஆகிய பகுதிகளில் பரவி நுரைஈரல் பாதிக்கப் பட்டு ஆக்சிஜன் கிடைக் காமல் கார்பன்டை ஆக் சைடு உள்ளே சென்றபோது அவர்களால் மூச்சுவிடமுடி யாமல் மூச்சுத்திணறி துடி துடித்து உயிரிழந்துள்ளனர், என மருத்துவர்கள் தெரி வித்தனர். விபத்து நடைபெற்ற அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு முதல் மூன்று வீடுகள் உள்ளது. இதில் மும்முனை மின் சார இணைப்பு உள்ளது. இதில் ஒரே டிரான்ஸ்பார்மரில் இருந்து வரும் மின்சாரம் அங்குள்ள மற்ற வீடுகளுக்கும் செல்கின்றது. இந்நிலையில், எப்படி அந்த ஒரு வீட்டில் மட்டும், அதுவும் ஒரு அறையில் இருந்த ஒரு மின்சாதன பொருளில் மட்டும் எப்படி மின்கசிவு ஏற்படும்?. மின்கசிவு ஏற்பட்டால் அது அங்குள்ள அனைத்து வீடுகளிலும் தான் ஏற்பட்டு இருக்கும். மேலும் வீட்டில் உள்ள மீட்டர் பாக்சில் தான் முதலில் தீப்பற்றி இருக்கும். ஆனால் அங்கு மீட்டர் பாக்ஸ் நல்ல முறையில் தான் உள்ளது. எனவே பிரிட்ஜில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என மின்வாரிய ஊழியர் கள் தெரிவிக்கின்றனர். மின்கசிவுக்கு அறிகுறி இல்லை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)