மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல் வங்கி தேர்வுகளை பிராந்திய மொழிகளில் நடத்தும் கோரிக்கை பரிசீலிக்கப்படும்

புதுடெல்லி, வங்கி தேர்வுகளை பிராந்திய மொழிகளிலும் நடத்துவது தொடர்பான கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங் களவையில் தெரிவித்தார். மாநிலங்களவையின் பூஜ்ய நேரத்தின்போது கர்நாடக மாநில காங்கிரஸ் எம்பியான ஜிசி, சந்திரசேகர் இந்த விவகாரத்தை எழுப்பினார். இந்திய வங்கிப்பணிகளுக்கான தேர்வுகள் மற்றும் இதர பணிகளுக்கான தேர்வுகளை, கர்நாடகத்தைச் சேர்ந்தவர்கள் எளிதாக எதிர்கொள்ளும் வகையில் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய மொழிகளுடன், கன்னட மொழியிலும் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மக்களவையில் உள்ள எம்பிக்கள் சிலரும் இதே விவகாரத்தை எழுப்பியுள்ளனர். இந்த விவகாரம், தனக்கென தனி மொழியைக் கொண்டுள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தொடர்புடைய ஒன்றாகும். தீவிரமான இந்த விவகா ரத்தை கவனத்தில் கொண் டுள்ளேன். பிராந்திய மொழிகளிலும் வங்கிப் பணிக்கான தேர்வுகளை நடத்துவது தொடர்பான கோரிக்கையை பரிசீலித்து, அவையில் அதுதொடர்பாக பதிலளிப்பேன் என்றார். முன்னதாக, காங்கிரஸ் ஜிசி உறுப்பினரான சந்திரசேகர் தனது இந்த கோரிக்கையை அவையில் எழுப்பியபோது கன்னட மொழியில் பேசினார். அவையில் அப்போது மொழி பெயர்ப்பு வசதி இல்லா ததை அடுத்து, சந்திர சேகரின் கோரிக்கையை மாநிலங் கள்வைத் தலைவரான வெங்கய்ய நாயுடு மொழி பெயர்த்து அவையில் கூறினார். மேலும், அவை உறுப்பினர்கள் தங்களது பிராந்திய மொழியிலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட 22 மொழிகளிலோ உரை யாட விரும்பும் பட்சத் தில், மொழி அவர்களுக்கான பெயர்ப்பு வசதியை ஏற்படுத்த முன்கூட்டியே வசதியாக அளிக்க நோட்டீஸ் வேண்டியது அவசியமாகும் என்று வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!