இ-பாஸ் கட்டாயம்... தமிழக அரசு அதிரடி உத்தரவு

 


தமிழகத்துக்கு வெளிநாடுகளிலிருந்து வருவோரும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வருவோரும் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லவும், வெளிமாநிலங்களிலிருந்து வருவதற்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. 

கொரோனா பரவல் குறைந்ததைத் தொடர்ந்து, இ-பாஸ் பெறுவதில் விலக்கு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருவதால், மீண்டும் இ-பாஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அரசாணையில், வெளிநாடுகளிலிருந்து வரும் அனைவரும் இ-பாஸ் பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களிலிருந்து வருவோரும் இ-பாஸ் பெற வேண்டும். அதேநேரம், கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களிலிருந்து வருவோருக்கு இ-பாஸ் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக காரணங்களுக்காக தமிழகம் வந்து 72 மணிநேரம் வரை மட்டுமே தங்கியிருப்போரை, வீடுகளில் தனிமைப்படுத்த வேண்டியதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருவோர், தங்களது பயணத் திட்டம் மற்றும் கடந்த 14 நாட்களுக்கு மேற்கொண்ட பயணம் ஆகிய விவரங்களை வலைதளத்தில் பதிவிட வேண்டும்.

பயணம் மேற்கொள்வதற்கு முந்தைய 72 மணிநேரத்துக்குள் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை பதிவேற்ற வேண்டும் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்