இப்போது mAadhaar செயலியில் 5 பேரின் சுயவிவரங்களை சேர்க்கலாம்




ஆதார் அட்டைதாரர்கள் இப்போது mAadhaar ஆப் மூலம் ஐந்து நபர்களின் சுயவிவரங்களைச் சேர்க்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) தெரிவித்துள்ளது. ஒவ்வொரு சுயவிவரத்தையும் உருவாக்க, ஆதார் அட்டைதாரர்கள் தங்கள் விவரங்களுடன் OTP ஐ உள்ளீடு செய்ய வேண்டும். ஒரு முறை கடவுச்சொல் அவர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்களுக்கு அனுப்பப்படும். 


இது குறித்து, UIDAI தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, "உங்கள் mAadhaar செயலியில் 5 ஆதார் சுயவிவரங்களை நீங்கள் சேர்க்கலாம். அங்கீகாரத்திற்காக ஆதார் வைத்திருப்பவரின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு  OTP அனுப்பப்படுகிறது. அதற்கு mAadhaar மொபைல் செயலியை முதலில் அப்டேட் செய்ய வேண்டும். அப்டேட் செய்தால் மட்டுமே இந்த 
ஆதார் தொடர்பான அனைத்து விவரங்களையும் UIDAI ஆணையம் நிர்வகித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ள ஆதார் பயோமெட்ரிக் ஐடி திட்டத்தின் கீழ் ஆன்லைனிலேயே பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. அதேபோல, ஆதார் கார்டுதாரர்களின் விவரங்களை டிஜிட்டல் முறையில் நிர்வகிக்கும் முறையை UIDAI சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், ஆதார் அட்டை இல்லாதவர்கள் டிஜிட்டல் முறையில் ஆதார் நகலை வைத்துக்கொள்ள முடியும். இதற்காக, UIDAI வலைதளத்திலோ அல்லது mAadhaar செயலியிலோ பதிவு செய்து டிஜிட்டல் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முன்னதாக mAadhaar செயலி மூலம் ஒருவர் தனது மொபைலில் ஒரே ஒரு ஆதார் சுயவிவரத்தை மட்டுமே சேர்க்க முடியும். தற்போது, 5 நபர்களின் சுயவிவரங்களை சேர்க்கலாம் என ஆணையம் தெரிவித்துள்ளது.

mAadhaar பயன்பாட்டை எங்கே பயன்படுத்தலாம்?

mAadhaar என்பது உங்கள் பர்சில் நீங்கள் வைத்திருக்கும் ஆதார் காகித அட்டையை விட மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். MAadhaar டிஜிட்டல் நகல் விமான நிலையங்கள் மற்றும் ரயில்வே நிலையங்கள்  போன்ற பல்வேறு இடங்களில் செல்லுபடியாகும் அடையாள ஆதாரமாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வாடிக்கையாளர்களின் ஆதார் சரிபார்ப்பைத் தேடும் சேவை வழங்குநர்களுடன் eKYC அல்லது QR குறியீட்டைப் பகிரவும் செயலியை நீங்கள் பயன்படுத்தலாம்.


MAadhaar பயன்பாட்டில் சுயவிவரத்தை உருவாக்குவது எப்படி?

* உங்கள் மொபைலில் கூகுள் பிளேஸ்டோர் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து MAadhaar செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

* குறிப்பாக நீங்கள் சரியான பயன்பாட்டைப் பதிவிறக்குகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்த டெவலப்பரின் பெயர் ‘இந்திய தனித்துவ அடையாள ஆணையம்’ என பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்கவும்.

* செயலி உள்நுழைந்து மெயின் டாஷ்போர்டின் மேல் காணப்படும் ரெஜிஸ்டர் ஆதார் என்ற டேபை கிளிக் செய்ய வேண்டும்.

* மேலும் 4 இலக்க பின் (pin) மற்றும் கடவுச்சொல்லை (password) உருவாக்கவும்

* அதன் பிறகு செல்லுபடியாகும் ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அதன் கீழ் காணும் கேப்ட்சாவை உள்ளிடவும்

* பிறகு உங்கள் ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும். அதனை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்

* பின்னர் உங்கள் சுயவிவரம் பதிவு செய்யப்பட வேண்டும்

* ரெஜிஸ்டர் டேப் இப்போது பதிவுசெய்யப்பட்ட ஆதார் பெயரைக் காண்பிக்கும்

* இப்பொது டாஷ்போர்டு கீழே உள்ள மெனுவில் எனது ஆதார் டேபை கிளிக் செய்ய வேண்டும்.

* நீங்கள் உருவாக்கிய 4 இலக்க பின் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்

* உங்களது ஆதார் விவரம் டாஷ்போர்டில் தோன்றும்

* இதே முறையை பயன்படுத்தி நீங்கள் 5 நபர்களின் சுய விவரங்களை சேர்க்கலாம்.

MAadhaar அட்டையில் சுயவிவரத்தைப் பார்ப்பது எப்படி?

மெயின் டாஷ்போர்டில் உள்ள ப்ரொபைல் சம்மரி பட்டனை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் புகைப்படம், பெயர் மற்றும் ஆதார் எண் போன்ற சுயவிவரத்தைக் காணலாம்.

பதிவு செய்த ஆதார் சுயவிவரங்களை அணுகுவது எப்படி?

உங்கள் மொபைலில் MAadhaar செயலியில் நுழைந்த பிறகு, மெயின் டாஷ்போர்டின் அடிப்பகுதியில் உள்ள ஆதார் சுயவிவர (Aadhaar profile) டேபை கிளிக் செய்யவும்.  நீங்கள் உருவாக்கிய 4 இலக்க பின் மற்றும்  கடவுச்சொல்லை உள்ளீடு செய்யவும். பின்னர் நீங்கள் எத்தனை சுயவிரங்களை சேர்த்துளீர்களோ அவை ஸ்லைடுகளாக தோன்றும். உங்களுக்கு தேவையான சுயவிரதை காண இடதுபுறமாக ஸ்வைப் செய்ய வேண்டும்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்