முன்னாள்-இந்நாள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகள் விசாரணையை துரிதப்படுத்த சிறப்பு நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
தமிழ்நாடு முழுவதும், முன்னாள்-இந்நாள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என, சிறப்பு நீதிமன்றங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து எடுத்துக் கொண்ட வழக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. எம்பி - எம்எல்ஏக்கள் மீதான நிலுவை வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க ஒரு முழுமையான செயல் திட்டத்தை வகுக்க வேண்டியுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டுமெனவும் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.