ஆத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்ட மக்கள்


சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் ஏரி உபரிநீர் திறப்பு விழாவுக்கு சென்ற ஆத்தூர் அதிமுக எம்.எல்.ஏ.வை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் பகுதியில் முறையாக அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும், ஏரி முறையாக தூர்வாரப்படவில்லை என்றும் புகார் கூறிய மக்கள், அதிமுக எம்.எல்.ஏ. சின்ன தம்பியை முற்றுகையிட்டு கேள்வி எழுப்பினர்.

எம்.எல்.ஏ.வுடன் வந்திருந்தவர்கள் பொதுமக்களிடம் பேசி சமாதானம் செய்ய முயன்றனர். அதை ஏற்க மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.