சென்னையில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு

சென்னையில் திமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கே.கே. நகர் 12ஆவது செக்டரில் வசிக்கும் தனசேகரன், திமுக தலைமைக்கழக செயற்குழு உறுப்பினராக உள்ளார்.


வீட்டின் ஒருபகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில், அமுதா என்ற பெண் கணினி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். அந்த பெண்ணுக்கும், அவரது கணவர் பொன்னுவேலுக்கும் இடையே குடும்பத் தகராறு உள்ளது.


இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் அலுவலகத்திற்கு வந்த பொன்னுவேல், தகராறில் ஈடுபட்டதோடு, அரிவாளால் வெட்டினார்.


அமுதா அலறல் சப்தம் கேட்டு, அங்கு வந்த தனசேகரன், தடுக்க முயன்றபோது, அவருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இருவரும், வடபழனி சூர்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.


தலைமறைவான பொன்னுவேலையும், அவரது நண்பன் மணிகண்டனையும், கே.கே.நகர் தனிப்படை போலீசார், கோட்டூர்புரத்தில் வைத்து கைது செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா