பீகார் தேர்தல் தேதி அறிவிப்பு


  • பீஹார் சட்டசபை தேர்தல் தொடர்பாக டில்லியில் நிருபர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியதாவது:

  • *243 தொகுதிகளை கொண்ட பீஹார் சட்டசபையின்பதவிக்காலம் 29 நவ., 2020 அன்றுடன் நிறைவு பெறுகிறது.

  • * 80 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தபால் மூலம் ஓட்டுப்போட அனுமதி * வீடு, வீடாக பிரசாரம் செய்ய செல்லும் அரசியல் கட்சியினர் 5 பேரை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும்

  • * தேர்தல் காலை 7 மணி முதல் 6 மணி வரை நடக்கும். ஆன்லைனில் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

  • * கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகள், தேர்தலின் கடைசி நாள் அன்று, தங்கள் பகுதியில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் சுகாதார அதிகாரிகளின் கண்காணிப்பில் ஓட்டுப்போடலாம். அவர்களும் தபால் மூலம் ஓட்டுப்போடலாம்

  • * 16 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் ஓட்டுப்போட தகுதியானவர்கள். * பீஹார் சட்டசபை தேர்தல் 3 கட்டமாக நடக்கும் அக்., 28, நவ.,3 மற்றும் 7 ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கும்.

  • * தேர்தலில் பதிவான ஓட்டுகள் நவ.,10 அன்று எண்ண ப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)