முதல்வர் வருகையையொட்டி தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் தடையை மீறி வைக்கப்பட்ட பேனர்களை நகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.


கொரோனா நோய் தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய முதலமைச்சர் பழனிசாமி இன்று காஞ்சிபுரம் செல்கிறார்.


அவரது வருகையையொட்டி காஞ்சிபுரத்தில் உள்ள பிரதான சாலைகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.


பலத்தக் காற்று அடிப்பதால், அந்த பேனர்கள் சாலையில் விழும் அபாயம் இருப்பதாகக் கூறி மக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. 


அதனைத்தொடர்ந்து காவலர்களின் உத்தரவின் பேரில், நகராட்சி ஊழியர்கள் பேனர்கள் அனைத்தையும் அப்புறப்படுத்தினர்.