“உளவுத்துறையினர் என்னை மிரட்டினர்” - மக்களவையில் கதிர் ஆனந்த் பரபரப்பு புகார்

உளவுத்துறையினர் தன்னை மிரட்டியதாக மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் புகார் தெரிவித்துள்ளார். மக்களவையின் புதிய உறுப்பினரான கதிர் ஆனந்த் சபாநாயகர் ஓம்பிர்லாவிடம் புகார் மனு ஒன்றினை அளித்தார்.


அதில், தான் தங்கியிருக்கும் தமிழ்நாடு இல்லத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தனக்கு மிரட்டல் விடுத்தனர். மேலும், தங்களை உளவுத்துறையினர் என கூறிக்கொண்டனர். 


இன்று மக்களவையில் விவாதிக்க இருக்கும் நடவடிக்கைகள் குறித்து கேட்டு அறிந்து கொள்ள முற்பட்டனர். ஒரு மக்களவை உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் நிலை என்ன” என கேள்வி எழுப்பியிருந்தார். இதைத்தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் தங்களிடம் போலீசார் அத்துமீறி நடப்பதாக குற்றம் சாட்டினர்.


இத்தகையை புகார்களை எழுத்துப்பூர்வமாக பாதிக்கப்பட்டவர்கள் எழுதி கொடுக்க வேண்டும் என சபாநாயகர் ஓம்பிர்லா உத்தரவு பிறப்பித்தார். கதிர் ஆனந்தின் புகார் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கருத்து கேட்கப்பட்டது.


அதற்கு பதிலளித்த முதலமைச்சர், “துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை யாரவது மிரட்ட முடியுமா? மிரட்டலுக்கு பயப்படுபவர்களா அவர்கள். திமுக தொண்டனை கூட மிரட்ட முடியாது” எனத் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு