உதிரம் கொடுத்து உயிரைக் காத்த திருநெல்வேலி மாவட்ட உதவி ஆய்வாளர்

தென்காசி மாவட்டம் ஊத்துமலை பகுதியை சேர்ந்த சகாயம் என்பவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.


இந்நிலையில் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய B Nagative இரத்தம் தேவைப்படுவதாக கூறினர்.அப்போது அவரது உறவினர் அருள் அவர்கள் தாய் தமிழ் அறக்கட்டளையைத் தொடர்பு கொண்டு தனது உறவினர்க்கு இரத்தம் தேவைப்படுவதாக கூறினார்.


தாய் தமிழ் அறக்கட்டளையினர் திருநெல்வேலி மாவட்ட உதவி ஆய்வாளர் திரு வாசுதேவன் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இவ்வாறு ரத்தம் தேவைப்படுகிறது என்று கேட்டுக் கொண்டதன் பேரில் உடனடியாக தருகிறேன் என்று கூறி மருத்துவமனைக்கு சென்று இரத்தம் வழங்கினார்.


இதன் மூலம் உடல்நிலை சரியில்லாத நபர் முழு சிகிச்சை பெற்று உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதை அறிந்ததும் உதவி ஆய்வாளர் மனம் மகிழ்ந்தார். உடல்நிலை சரியில்லாத நபருக்கு இரத்தம் வழங்கி உதவிய திருநெல்வேலி மாவட்ட தனிப்பிரிவு காவல் உதவி ஆய்வாளர் அவர்களுக்கு சகாயத்தின் குடும்பத்தினர் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு