கடத்தப்பட்ட தமிழக அமைச்சரின் உதவியாளர் கர்ணன் மீட்பு 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு

தமிழக கால்நடை பராமரிப் புத் துறை அமைச்சராக இருப்பவர் உடுமலை ராதாகிருஷ்ணன். உடு மலை சட்டமன்ற உறுப்பினரான இவரது அலுவலகம் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ளது. இவரது உதவியாளராக இருப்பவர் கர்ணன். இன்று காலை அமைச் சரின் அலுவலகத்தில் உதவியாளர் கர்ணன் மட்டும் அமர்ந்திருந்தார்.


இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் உடுமலைப்பேட்டை அன்சாரி வீதியில் உள்ள சட்ட மன்ற அலுவலகத்திற்குள் திடீ ரென்று நுழைந்த 4 பேர் கொண்ட கும்பல் அமைச்சரின் உதவியாளர் கர்ணனை கத்தியைக் காட்டி மிரட்டி, காருக்குள் கொண்டு சென்று அவரைக் கடத்திச் சென் றனர். இந்தச் சம்பவம் அனைத்தும் சிசி.டி.வி. கேமராக்களில் பதிவாகி யுள்ளது.


உதவியாளர் கர்ணன் காரில் கடத்தப்பட்டது தொடர் பாக தகவல் அறிந்ததும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப் பாளர் நிஷாமிட்டல் உடனடியாக உடுமலைப்பேட்டை விரைந்து வந்து சம்பவ இடத்தைப் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.


அமைச்சரின் உதவியாளர் எதற்காகக் கடத்தப்பட்டார்? முன் விரோதத்தின் காரணமாக கடத் தப்பட்டாரா? அல்லது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை தாக்க வந்தவர்களா என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசா ரணையை முடுக்கிவிட்டிருக்கிறார் கள். இந்தச் சம்பவம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் கடத்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ் ணனின் உதவியாளர் கர்ணன் தற்போது மீட்கப்பட்டுள்ளார். கர்ணனை கடத்திச் சென்ற கும்பல் தனி பகுதியில் அவரை இறக்கி விட்டு சென்றுள்ளனர். கர்ணனை மீட்டு காவல்துறையினர் விசா ரணை நடத்தி வருகிறார்கள். திருப் பூர் மாவட்டத்தில் அமைச்சரின் உதவியாளர் கர்ணன் மர்ம நபர்கள் கடத்திச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)