சுதந்திர தின விழாவிற்கு தயாராகும் தலைமைச் செயலகம்



சுதந்திர தின விழாவிற்கு தயாராகும் தலைமைச் செயலகம் கொரோனா தொற்றால் நாடு முழுவதும் பொது முடக்கத்தால் முடங்கியிருக்கும் நிலையில் வரும் 15ஆம் தேதி நாட்டின் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படவுள்ளது


சமூக இடைவெளியுடன் அரசின் வழிமுறைகளை கடைபிடித்து சுதந்திர தின விழாவை கொண்டாட அரசு அனுமதியளித்துள்ளது.இந்நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டத்திற்காக சென்னை மாநகரம் மின்னொளியில் ஜொலிக்கிறது.


சென்னை தலைமை செயலக கட்டடம் முழுவதும் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை, விளக்குகளால் அலங்கறிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலகத்திற்கு எதிரில் காமராஜர் சாலையில் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை முதல்வர் ஏற்கும் நிகழ்விற்கா பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.


இதே போல் காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலம் வண்ண விளக்குகளால் அளங்கறிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது. வெள்ளையடித்து புதுப்பிக்கப்பட்டுள்ள


பாலத்தின் வளைவுகளில் வானவில் வண்ணத்தில் அலங்கார விளக்குகளும், வளைவின் அடிப்பகுதியில் ஆரஞ்சு, வெள்ளை, பச்சை நிற விளக்குகளால் தேசிய கொடி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மின்விள்கொளியின் ஜொலிக்கும் சாலைகள் சென்னைவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)