வீட்டுக்குள் புகுந்து ரஷ்ய பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டிய சாமியார் : திருப்பி தாக்கி போலீசில் ஒப்படைத்த பெண்

திருவண்ணாமலையில் வீட்டுக்குள் நுழைந்து கத்தியை காட்டி அத்துமீறலில் ஈடுபட முயன்ற சாமியாரை, காரத்தே கலையை பயன்படுத்தி திருப்பி தாக்கிய ரஷ்ய நாட்டு பெண், பொதுமக்கள் உதவியுடன் போலீசில் ஒப்படைத்தார்.


கிரிவலப் பாதையில் உள்ள ருத்ராட்ச இல்லத்தில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஆஷா சார்லெட் கடந்த ஜனவரி மாதத்திலிருந்து வசித்து வந்துள்ளார்.


கோவை மாவட்டத்தை சேர்ந்த சாமியார் மணிகண்டன், ஆஷா சார்லெட்டை சில நாட்களாக பின்தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ஆஷா வீட்டில் தனியாக இருக்கும் நேரம் பார்த்து புகுந்து கத்தியைக் காட்டி சாமியார் மணிகண்டன் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.


கராத்தே கற்ற ஆஷா, மணிகண்டனை தாக்கி கத்தியை பிடுங்கியதோடு, சத்தமிட்டு அக்கம் பக்கத்தினர் உதவியுடன் போலீசை வரவழைத்து அத்துமீறிய சாமியாரை ஒப்படைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா