எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ கட்சிகளுக்கு தடை: கர்நாடக அமைச்சரவை ஆலோசன

கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதுகுறித்து சட்ட அமைச்சர் மதுசாமி கூறும்போது, "கர்நாடகாவில் கடந்த சில ஆண்டுகளாக எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய இரு கட்சிகளும் வன்முறையில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.


பெங்களூருவில் கடந்த 11-ம் தேதி நடந்த கலவரத்திலும் எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ ஆகிய கட்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை.


இதுவரை இரு கட்சிகளின் தொடர்பு குறித்த ஆதாரங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. போலீஸாரின் விசாரணைக்குப் பிறகே பெங்களூரு கலவரத்தில் எஸ்டிபிஐ, பிஎஃப்ஐ கட்சிகளுக்கு உள்ள பங்கு பற்றி தெரியவரும். உரிய ஆதாரங்கள் இல்லாமல் அந்தக் கட்சிகளை தடை செய்யும் முடிவை எடுக்க முடியாது.


முதல் கட்டமாக அந்த கட்சிகளை தடை செய்வது குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்துகேட்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. காவல் துறை மற்றும் சட்டத் துறையின் கருத்துகள் கிடைத்த பிறகு அக்கட்சிகளை தடை செய்வது குறித்து இறுதி முடிவெடுக்கப்படும்" என்றார்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
‘நீ செத்துப் போ.. நா வீடியோ எடுக்கற’ : மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்ததை வீடியோ எடுத்த கணவன்!!!
Image
”கீழ இறங்குடா.. உன்னை கொன்னுடுவேன்” : மின் இணைப்பை துண்டிக்க சென்ற ஊழியரை கல்லை கொண்டு மிரட்டிய பெண்!!!
Image
சிக்னலில் நின்ற பெண்ணிடம் பணம் கேட்ட திருநங்கை: தர மறுத்ததால் ஆபாச பேச்சு…முகம் சுழிக்க வைத்த செயல்..!!
Image
தி.மு.க மூத்த தலைவரை பொதுவெளியில் விமர்சித்த நிதி அமைச்சர் #PTR - உச்சக்கட்டத்தில் உட்கட்சி பூசல்! https://kathir.news/news/-ptr--1204682
Image