அதிமுகஅதிமுக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் தனிப்பட்ட கருத்துகளை தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இதை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இபிஎஸ் ஓபிஎஸ் கூட்டமாக அறிக்கை..


அரசியல் ட்ரெண்டிங் தமிழ்நாடு முடிவுக்கு வந்த முதல்வர் வேட்பாளர் விவகாரம்…! கருத்து தெரிவிக்க அதிமுகவினருக்கு தடா


அதிமுக ஆலோசனை, அதிமுக கூட்டறிக்கை, அரசியல், ஓபிஎஸ் ஈபிஎஸ், முதல்வர் வேட்பாளர் சென்னை: அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


தமிழக சட்டசபைக்கு அடுத்தாண்டு தேர்தல் வர உள்ளது. ஆனால் அதிமுகவில் இப்போது யார் முதல்வர் என்ற பரபரப்பு கடந்த ஒரு வாரமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.


இது அக்கட்சியில் பெரும் விவாதமாக மாறியது. இந் நிலையில், துணை முதல்வர் இல்லத்திலும், முதலமைச்சர் இல்லத்திலும் அமைச்சர்கள் குழுவாக சென்று பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதில் ஒரு சுமூக முடிவு எட்டப்பட்டு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந் நிலையில் அதிமுக தலைமையின் ஒப்புதலின்றி தனிப்பட்ட கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், துணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


அந்த அறிக்கையில் மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டிய நேரமிது. இனிவரும் காலங்களிலும் சிறப்புற ஆட்சி நடத்தி மீண்டும் ஒரு தொடர் வெற்றியை பெற்றிடுவோம் என்றும் இருவரும் கூறியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு