நீதிமன்றத்தில் கூனிக்குறுகி மன்னிப்புகேட்டது ஆண்மைச் செயலா -எச்.ராஜா பதிவுக்கு அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக பொது இடங்களில் சிலை வைத்து கொண்டாட தமிழக அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், அனுமதிக்க வேண்டும் என பாஜக மற்றும் இந்து அமைப்புகள் வலியுறுத்து வருகின்றன.


பாஜக தலைவர் முருகன், முதலமைச்சர் பழனிசாமியிடம் நேரில் சென்று கேட்டுக்கொண்டார்.


இந்நிலையில், தமிழக பாஜக தலைவர்கள் சிலர், சிலை வைக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், தமிழக அரசை விமர்சித்தும் வருகின்றனர். இந்தநிலையில், நேற்று இந்த விவகாரம் தொடர்பாக எச்.ராஜா பதவிட்ட ட்விட்டர் பதிவில், ‘கர்நாடகாவில் விநாயகர்


சிலைகளை பிரதிஷ்டை செய்யவும் சதுர்த்தி கொண்டாடவும் அனுமதி. ஆண்மையுள்ள அரசு’ என்று குறிப்பிட்டிருந்தார். இவருடைய ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியது. அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் எச்.ராஜாவைக் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர்.


இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ‘அதிமுகனவினரை எச்.ராஜா உரசி பார்க்கக் கூடாது. எச்.ராஜா பற்றி உங்களுக்கே தெரியும்.


ஒரு டிவீட் போட்டு ஓடி ஒளிந்து கொண்டவர்கள் ஆண்மை உள்ளவர்களா? அவர், விளம்பரத்துக்காக சொல்கிறார்.


அந்த சொல் அவருக்கு தான் பொருந்தும். அட்மின் ட்வீட் போட்டார் என்று சொன்னது ஆண்மை உள்ள செயலா? தன் முதுகை முதலில் பார்க்க வேண்டும். நீதிமன்றத்தில் கூனி குறுகி மன்னிப்பு கேட்டது ஆண்மை உள்ள செயலா?’ என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு