வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்ட சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முழு ஊரடங்கையொட்டி அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகே காவல் குழுவினரின் வாகன தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிவுரைகளை வழங்கினார்._


கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கையொட்டி, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில் சென்னை பெருநகர் முழுவதும் காவல் குழுவினர் அமைத்தும், பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்தும், தீவிரமாக கண்காணித்து 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்._ 


அதன்பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், அவர்கள் இன்று (19.7.2020) மாலை அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல் அருகில் முழு ஊரடங்கையொட்டி காவல் குழுவினர் மேற்கொண்டு வரும் வாகனத் தணிக்கை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, அறிவுரைகளை வழங்கினார்._


இந்நிகழ்வின்போது கிழக்கு மண்டல இணை ஆணையாளர் R.சுதாகர், போக்குவரத்து காவல் இணை ஆணையாளர் (தெற்கு) திருமதி.எஸ்.லஷ்மி, திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் ஜி.தர்மராஜன் போக்குவரத்து துணை ஆணையாளர் (கிழக்கு) எஸ்.ஆர்.செந்தில்குமார் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்_


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா