சென்னையிலிருந்து இ-பாஸ் இல்லாமல் 38 பயணிகளுடன் வந்த ஆம்னி பஸ் பறிமுதல்: தனிமை முகாமிற்கு அனுப்பப்பட்டனர்

மேலூர்: சென்னையிலிருந்து இ-பாஸ் இல்லாமல் பயணிகளுடன் வந்த ஆம்னி பஸ்சை, சூரப்பட்டி சோதனைச்சாவடியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதில் வந்த 38 பயணிகள் தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


மதுரை மாவட்ட எல்லையான கொட்டாம்பட்டி அருகே, சூரப்பட்டி நான்கு வழிச்சாலையில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு போலீசார், மருத்துவம் மற்றும் வருவாய்த்துறையினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணித்து வருகின்றனர்.


வெளியூர்களிலிருந்து வரும் டூவீலர், கார், பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே மதுரைக்குள் அனுப்பப்படுகின்றன.


இந்நிலையில், சென்னை தாம்பரத்தில் இருந்து இ-பாஸ் இல்லாத 38 பயணிகளுடன் வந்த ஆம்னி பஸ்சை சூரப்பட்டி சோதனைச்சாவடியில் நேற்று பறிமுதல் செய்தனர்.


அந்த பஸ் கொட்டாம்பட்டி காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதொடர்பாக டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.


காரில் வந்த 38 பயணிகளும் மேலூர் கொட்டகுடியில் உள்ள தனிமை முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தொற்று இல்லை என உறுதியான பின்னரே, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)