செங்கல்பட்டு எஸ்பி கண்ணன் சஸ்பெண்ட்.. இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி
டெல்லி: செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பாதுகாப்பு பணிக்கு சென்ற போது பெண் எஸ்பிக்கு கள்ளக்குறிச்சியில் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார் குறித்து உயரதிகாரிக்கு புகார் அளிக்க பெண் எஸ் பி சென்னைக்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக இருந்த கண்ணன் பரனூர் சுங்கச்சாவடியில் தடுத்து நிறுத்தியாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே எஸ்பி கண்ணன் வணிக குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்த நிலையில் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக தேர்தல் ஆணையத்திற்கு காவல் ஆணையர் கடிதம் எழுதியது.
இதையடுத்து தமிழக தேர்தல் தேர்தல் ஆணையரின் பரிந்துரையின் பேரில் கண்ணனை இந்திய தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சம்பவங்கள், சமூகம் சார்ந்த நிகழ்வுகள் மற்றும் பல செய்திகளை சுடச் சுட உங்களுக்கு அளித்து வரும் எங்கள் இணையதளத்தின் புதிய வரவு