அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு_


அமைச்சர் பதவியைப் பயன்படுத்தி 2011 முதல் 2013 ஆம் ஆண்டு வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவிப்பில் ஈடுபட்டதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மகேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுதித்திருந்தார். 

வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்ற நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் இருவேறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மீது வழக்குப் பதிவுசெய்து ஆளுநரிடம் உரிய ஒப்புதல் பெற்று விசாரிக்க வேண்டும்' என நீதிபதி சத்தியா நாராயணன் தீர்ப்பளித்துள்ளார். 

அதேபோல், ‘இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது வழக்குப் பதிய முகாந்திரம் இல்லை' என நீதிபதி ஹேமலதா தீர்ப்பளித்துள்ளார். 

ஒரே வழக்கில் நீதிபதிகளின் இருவேறுபட்ட தீர்ப்பால், இந்த வழக்கு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு