வெட்ட வந்த இளைஞர்கள்.... ஓட ஓட விரட்டும் அதிமுக பிரமுகர்... சிசிடிவி காட்சிகள்!
சென்னை அம்பத்தூர் அருகே ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில், பட்டப்பகலில் வெட்ட வந்தவர்களை அதிமுக பிரமுகர் ஒருவர், ஓட ஓட விரட்டி வெட்ட முயன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
அயப்பாக்கத்தைச் சேர்ந்த மூர்த்தி என்பவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று, திருமண அழைப்பிதழ் கொடுக்க வேண்டும் எனக் கூறி அழைத்துள்ளது. அப்போது வீட்டிலிருந்து வெளியே வந்த அவரை, அந்தக்கும்பல், அரிவாளால் தாக்கியுள்ளது.
இதனால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக மூர்த்தி சிறிது தூரம் ஓடியிருக்கிறார். பின்னர் சுதாரித்துக்கொண்டு பிரபாகரன் என்பவன், கொண்டு வந்த அரிவாளைப் பறித்து அவனை, திருப்பி வெட்டியதுடன் எஞ்சியவர்களை விரட்டியுள்ளார்.
இச்சம்பவத்தில் படுகாயமடைந்த மூர்த்தி மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மூர்த்தியை கொலை செய்ய முயன்ற விஜயசேகர்,ராஜு, மற்றும் முத்து ஆகிய 3 பேரை 2மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்