நிறுத்தப்பட்ட 700 அரசு ஏசி பேருந்துகளின் சேவை விரைவில் தொடக்கம்: போக்குவரத்து கழகம் நடவடிக்கை

 


கரோனா ஊரடங்கின்போது தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் நிறுத்தப்பட்டிருந்த 700 ஏசி பேருந்துகளின் சேவையை விரைவில் தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இது தொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

பயணிகள் வருகை அதிகரிப்பு

கரோனா ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு பெரும்பாலான பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. அதே நேரத்தில் கடந்த 2 மாதங்களாக பயணிகளின் வருகையும் பழைய நிலைக்கு திரும்பி வருகின்றன.

இருப்பினும், 100 சதவீதபயணிகள் இன்னும் திரும்ப வில்லை. இதனால், அரசு போக்குவரத்துக் கழகங்களில் வருவாய் இழப்பு இருந்து வருகிறது.

வெயில்காலம் தொடங்குகிறது

கரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டு இருக்கிறது. மார்ச் மாதத்துக்குப் பிறகு வெயில் காலமும் தொடங்கவுள்ளதால், நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த அரசு போக்குவரத்து கழக ஏசி பேருந்துகளின் சேவையை விரைவில் தொடங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அதன்படி, அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் - 354, விழுப்புரம் - 92, கும்பகோணம் - 50 உட்பட மொத்தம் 700 ஏசி பேருந்துகளின் சேவையை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)