மகளிர் காவல்நிலையங்களில் ரூ.5-க்கு நாப்கின் வழங்கும் வசதி! பெண் காவலர்கள் நன்றி..

 


இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 45 காவல் நிலையங்களிலும், 6 அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் சுமார் 51 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் காவலர்கள் பணியில் உள்ளனர். 

இவர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போது மாதவிடாய் காலத்தில் பெரும் சிரமப்பட்டுள்ளனர். இதனை அறிந்த கடலூர் மவாட்ட எஸ்.பி ஶ்ரீஅபிநவ் பெண் காவலர்களுக்கு மாதவிடாய் காலத்தில் தேவையான வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தனியார் நிறுவனத்துடன் பேசி அனைத்து காவல் நிலையங்களிலும் மற்றும் பாதுகாப்பு பணியின் போது பெண்களுக்கு தேவையான சானிட்டரி நாப்கின் வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.

இன்று கடலூர் மாவட்டத்தில் 65 இடங்களில் அனைத்து பெண் காவலர்களுக்கும் பயனுள்ள வகையில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷின் வசதியை துவக்கி வைத்துள்ளார் கடலூர் மாவட்ட எஸ்.பி

பெண் காவலர்கள் மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின் வெண்டிங் மெஷினில் ரூ.5 கட்டணம் செலுத்தினால் நாப்கினை பயன்பாட்டிற்கு எடுத்து கொள்ளலாம். இதனை மாவட்ட எஸ்.பி. ஶ்ரீஅபிநவ் கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் திறந்து வைத்த பின்னர் பெண் காவலர்கள் ரூ.5 கட்டணம் செலுத்தி நாப்கினை எடுத்து சென்றனர்.

மாதவிடாய் காலத்தில் பெண் காவலர்கள் படும் அவதியினை ஒரு சகோதரனாக அறிந்து ஏற்பாடு செய்த கடலூர் மாவட்ட எஸ்.பி க்கு பெண் டி.எஸ்.பி சாந்தி உட்பட பெண் காவலர்கள் அனைவரும் நன்றி தெரிவித்தனர்.


Popular posts
பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....
Image
அடி..வாட்டர் பாட்டில் ...முதுகில் குத்து.. டயர் பஞ்சர் : கூட்டத்தில் வைத்து OPS-ஐ தாக்கிய கும்பல்
Image
முதியோர்களின் மக்கள் தொகை உருவாக்கும் சவால்களை எதிர்கொள்ள அரசாங்கமும், சிவில் சமூகமும் போராடுகின்றன.
Image
முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்
Image
ஆர்டர்லிகளை உடனே திரும்பப் பெற வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்
Image