புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெற வலியுறுத்தி வருகிற 8-ம் தேதி தர்ணா போராட்டம் - முதலமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு


புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பபெற வலியுறுத்தி வருகிற 8-ம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி காப்போம், மீட்போம் என்ற தலைப்பில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தை கனகசெட்டிகுளத்தில் இருந்து முதலமைச்சர் நாராயணசாமி தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் பேசிய அவர், புதுச்சேரி மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக உள்ளதாக குற்றம்சாட்டினார்.