முருகப்பெருமானின் வேல்... வன்முறைக்கான ஆயுதமாம்..! காங்கிரஸ் தலைவர் சொல்கிறார்

வேல் என்றால் வன்முறைக்கான ஆயுதம் என்று ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் கூறியிருப்பதாக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்த நிலையில் உண்மையில் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் என்ற சொல்லுக்கு அப்படி விளக்கம் ஏதுமில்லை என்பதால் முருகபக்தர்கள் கே.எஸ். அழகிரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 


சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி, தமிழக அரசு ஒரு விசித்திரமான ஜந்து என்று கடுமையாக விமர்சித்தார். அவர்களுக்கு எந்தவிதமான உருவம் கொடுப்பது என்றே நம்மால் சொல்ல முடியாது என்று கூறியதோடு ஐ சி எம் ஆர் மற்றும் உலக சுகாதார அமைப்பு கூறியிருப்பதாவது வைரஸ் தொற்று ஒவ்வொரு நேரத்திற்கும் உருமாறும் வைரஸ் தொற்று உருமாறுவது போலதான் அதிமுகவும் என்றார்


 


வேல் யாத்திரை அல்ல வாள் யாத்திரை செய்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் வந்துவிடாது, ஆன்மீகம் என்பது இறை நம்பிக்கை உடையது. மகாத்மா காந்தி ஆன்மீகத்தை கற்பித்தார், ஆர்எஸ்எஸ் மதவெறியை ஊட்டினார்கள் என்று கூறிய கே.எஸ். அழகிரி, தமிழ்நாட்டில் கிருபானந்த வாரியார் கையில் முருகப்பெருமான் இருந்தவரை இந்த நாடு நல்லா இருந்தது என்றார். மேலும் அவர் முருகப்பெருமானை தோளிலும் கையில் வைத்துக் கொண்டு அவர் நாடு முழுவதும் சுற்றி வந்தார். மக்கள் முருகர் மேல் நம்பிக்கை வைத்திருந்தனர் என்று கூறினார்


 


பாரதிய ஜனதா முருகரை விட்டுவிட்டு, கையிலுள்ள வேலை மட்டும் எடுத்துக்கொண்டனர், இவர்களுக்கு வன்முறையின் மீது நம்பிக்கை..! என கே.எஸ்.அழகிரி கூறியிருக்கிறார்.


 


ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் பார்த்தால், வேலுக்கு என்ன விளக்கம் சொல்லி இருக்கிறார்கள் என்றால் வேல் ஒரு வன்முறை ஆயுதம்..! எதிரிகளை வீழ்த்தி சாகடிக்கிற ஒரு ஆயுதம்..! மற்றவர்களை போருக்கு கூவி அழைக்கிற ஆயுதம்..! என்று சொல்லி இருக்கிறார்கள் என்று கூறினார் கே.எஸ்.அழகிரி


 


காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் இந்த கருந்து முருகபக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உண்மையில் ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் என்ற சொல்லுக்கு அர்த்தம் ஏதும் குறிப்பிடபடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.


 


மேலும் டெப்னீசன் டாட் நெட் என்ற பிரசித்தி பெற்ற பன்மொழி அகராதி தளத்தில் வேல் என்பதற்கு இந்து தெய்வமான முருகனின் தெய்வீக ஈட்டி என்றும் பண்டைய தமிழர்கள் போரில் பயன்படுத்திய ஈட்டி பொதுவாக வேல் என்று அழைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது, என்று சுட்டிக்காட்டுகின்றனர் முருகபக்தர்கள்


 


கே.எஸ்.அழகிரி எந்த ஊரு ஆக்ஸ்போர்டு டிக்ஸ்னரியில் வேல் குறித்து வன்முறை ஆயுதம் என்று அவதூறாக குறிப்பிட்டு உள்ளது என்பதை ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை