பணம் வராததால் கோபத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்த இளைஞர்..
சென்னையின் சோழிங்கநல்லூர் அருகே பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மிஷினை உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
சோழிங்கநல்லூர் அருகேயுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு காலனியில் இரண்டு தனியார் வங்கியின் ஏடிஎம் மையங்கள் உள்ளது. இதில் உள்ள இரண்டு மிஷின்களும் உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் அந்தப்பகுதியில் கட்டிடவேலை செய்துவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வடமாநில இளைஞர் புருஷோட்டம் பாண்டே என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், இரு ஏடிஎம் மிஷின்களிலும் பணம் வராததால் அதனை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்துபுருஷோட்டம் பாண்டேவை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.