சென்னை கோயம்பேட்டில் கடத்தப்பட்ட மூன்று மாதக் குழந்தை 24 மணி நேரத்திற்குள் மீட்பு - பெற்றோரிடம் ஒப்படைப்பு

சென்னை கோயம்பேடு சந்தையில் கடத்தப்பட்ட, சுமை தூக்கும் கூலித் தொழிலாளியின் மூன்று மாதக் குழந்தை 24 மணி நேரத்திற்குள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.


 


விழுப்புரத்தைச் சேர்ந்த ரமேஷ் அவர் மனைவி சத்தியா, ஆகியோர் தங்களது இரண்டு குழந்தைகளுடன் பணியாற்றும் கடை முன் இரவில் உறங்கியுள்ளனர். இரவில் திடீரென விழித்துப் பார்த்தபோது அருகில் கிடத்தியிருந்த 3 மாதப் பெண் குழந்தையைக் காணவில்லை.


 


இதுதொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சிக்னலை ஆய்வு செய்து, கடத்தல் காரன் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மறைந்து இருப்பதை கண்டறிந்துள்ளனர்.


 


அந்த இடத்தை போலீசார் நெருங்கியபோது குழந்தையை அருகிலிருந்த புதரில் வீசிவிட்டு கடத்தல்காரன் தப்பிச் சென்றுள்ளான். இதையடுத்து தப்பிச் சென்றவனை போலீசார் தேடி வருகின்றனர்.


 


குழந்தையை மீட்ட போலீசார் அதன் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.