தொலைச்சி புடுவேன் தொலைச்சி...! பகிரங்க மிரட்டல் ஆடியோ..! மருத்துவரா..இல்ல மாஃபியாவா..

பெரம்பலூரில் அரசு பெண் மருத்துவரை தற்காலிக பணியிட மாற்றம் செய்த மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனரை, செல்போனில் தொடர்பு கொண்ட அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் மிரட்டும் தொனியில் பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.


 


அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களை தேவைக்கு ஏற்ப தற்காலிக பணியிடமாறுதல் செய்வது வழக்கமான நடைமுறை.


 


அந்த வகையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்து கடந்த நான்கு மாதங்களாக பொது மருத்துவ பிரிவில் மருத்துவராக பணியாற்றி வந்த டாக்டர் கிருத்திகா என்பவரை, அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு தாலுகா பொது மருத்துவமனையில் பணிபுரிய 6 நாட்கள் மட்டும் தற்காலிக பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.


 


இதற்கான உத்தரவை பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் திருமால் பிறப்பித்திருந்தார்.


 


இந்த உத்தரவை மதிக்காமல், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு பணிக்கு செல்ல மறுத்த டாக்டர் கிருத்திகா, மருத்துவ விடுப்பு எடுத்துச்சென்று விட்டார்.


 


பின்னர் தான் உறுப்பினராக உள்ள தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் அர்ஜூனன் என்பவரிடம் கிருத்திகா சிபாரிசுக்கு சென்றுள்ளார்.


 


அர்ஜூனனின் சிபாரிசை ஏற்க மறுத்த திருமால், தனது உத்தரவை மதித்து ஒரு நாளாவது ஜெயங்கொண்டத்தில் பணிபுரிய சொல்லுங்கள், மீண்டும் பழைய இடத்திற்கு பணியிட மாறுதல் உத்தரவில் கையெழுத்திடுகிறேன் எனக் கூறியுள்ளார்


 


இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் டாக்டர்.செந்தில் என்பவர், பெரம்பலூர் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் திருமாலை செல்போனில் தொடர்பு கொண்டு, கிருத்திகாவின் தற்காலிக பணியிட மாறுதல் தொடர்பாக அதிகார தொனியில் பேசி மிரட்டியதாக கூறப்படுகின்றது


 


செந்திலின் இந்த மிரட்டல் தொடர்பாக ஆடியோ ஆதாரத்துடன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் சென்னை, மருத்துவ பணிகள் இயக்குனரகத்திற்கும் எழுத்து பூர்வ புகார் ஒன்றை அனுப்பி உள்ளார் திருமால்.


 


மருத்துவர்கள் பணியிடமாறுதல் தொடங்கி பல்வேறு வகைகளில் செந்தில் முறைகேட்டில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் செந்திலை தொடர்பு கொள்ள இயலவில்லை.


 


இந்த மிரட்டல் சம்பவத்தின் ஆடியோ அரசு மருத்துவர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.


 


 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா