உ.பியில் அடுத்தடுத்து பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்..

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையைத் தொடர்ந்து, உத்தர பிரதேசத்தின் பக்பத் மற்றும் புலந்த்சாஹ்ர் பகுதிகளிலும், 18 வயது நிரம்பாத இரண்டு இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.


பக்பத்தின் கோல்வாலி பகுதியைச் சேர்ந்த 17 வயது இளம்பெண், கடந்த 27ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், அவர் விஷமருந்தி தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார்.


இதுதொடர்பாக பேசிய அம்மாவட்டக் கண்காணிப்பாளர் அபிஷேக் சிங், சம்பவத்தில் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல புலந்த்சாஹ்ரின் கக்கோரே பகுதியில், 14 வயது பெண், பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை துயரத்துக்கு ஆளாகி உள்ளார்.


குற்றம்சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். - உ.பியில் பெரும் பரபரப்பு இச்சம்பவங்கள் தொடர்பாக பேசிய பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, பெண்களுக்கு பாதுகாப்பு வழங்கமுடியவில்லை என்றால், முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.