பாபர் மசூதி இடிப்பு வழக்கின் தீர்ப்பு: ‘பாஜக கட்டுப்பாட்டில் சிபிஐ; நீதிபதிகளுக்கு விலை’ - SDPI குற்றச்சாட்டு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்தது. பாபர் மசூதி திட்டமிட்டு இடிக்கப்படவில்லை என்றும் தீர்ப்பளித்தது.


இந்த தீர்ப்பை எதிர்த்து SDPI கட்சி திருச்சி மாவட்ட தலைவர் இமாம் R ஹஸ்ஸான் பைஜி தலைமையில் பாலக்கரை ரவுண்டானா பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் நிஜாம் மைதீன், பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மண்டல தலைவர் அமீர் பாஷா, பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா திருச்சி மாவட்ட செயலாளர் முஜிபூர், SDPI கட்சியினர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


எஸ்.டி.பி.ஐ குற்றச்சாட்டு ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர்,SDPI மாநிலப் பொதுச் செயலாளர் நிஜாம் மொய்தீன் செய்தியாளர்களிடம் கூறுகையில், அடுக்கடுக்கான ஆதாரங்கள் இருந்தும்பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்திருப்பது பாரதிய ஜனதா கட்சியின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ இருக்கிறது என்று உறுதியாகியிருக்கிறது.


எம்.பி, ஆளுநர் பதவிகளைக் காட்டி நீதிபதிகளை விலைக்கு வாங்கி விட்டார்கள் என்கிற எண்ணம் தோன்றுகிறது. இதன் மூலம் நீதீமன்றத்தின் மீதான நம்பிக்கை மக்களிடத்தில் படிப்படியாக குறைந்து கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இந்திய இறையாண்மைக்கு நல்லதல்ல. எனவே உடனே உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். பாபர் மசூதி இடிப்பு குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை போராடுவோம் என்றார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா