சாத்தான்குளத்தில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்றவர் கைது

சாத்தான்குளத்தில் காவல்துறையைக் கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருக்க முயன்ற விஸ்வகர்மா பொது தொழிலாளர் சங்க செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


 


தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள முத்துக்கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் நகை தொழிலாளர் மூக்காண்டி. இவருக்கும் வேறு ஒரு நபருக்கும் சொத்துப் பிரச்னை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு இருந்து வந்தது. இந்நிலையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாக குறிப்பிட்ட அந்த நிலத்தில் உள்ள உடை மரங்களை எதிர்தரப்பினர் வெட்டியுள்ளார்


இது குறித்து சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என காவல்துறையை கண்டித்தும் நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் அந்த இடத்திற்கு தீர்வு ரசீது வழங்கிய ஊராட்சி்மன்றத்தை கண்டித்தும் மின்சாரம் வழங்கிய மின்வாரியதுறையைக் கண்டித்தும் தொடர்ந்து 7 நாட்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக ஒரு வாரத்திற்கு முன்பாக அறிவிப்பு கொடுத்திருந்தார். 


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா