போலீசுக்கு தண்ணி காட்டும், துப்பாக்கி கொள்ளையர்கள்!

தென்காசி அருகே உள்ள மேல மெய் ஞான புரத்தில் வசித்து வருபவர் ரவீந்திரன்இவர் தனது வீட்டிலேயே சித்த வைத்திய சாலை நடத்தி வருகிறார். இவருக்கு அப்பகுதியில் இரண்டு வீடுகள் உள்ளன. அதில் ஒன்றை விற்பனை செய்யும் முடிவில் புரோக்கர்களை தொடர்பு கொண்டுள்ளார்.


இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் வந்த 6 மர்ம நபர்கள் வீட்டை காண்பிக்கும் படி கூறியுள்ளனர். ரவீந்தரனும் அவரது அண்ண ன் தனபாலும் வீட்டை காண்பிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த மர்ம நபர்கள் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி ரவீந்திரன் கழுத்தில் இருந்த 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.


அதனை தொடர்ந்து ரவீந்தரனை அதே வீட்டில் கட்டி போட்டு விட்டு அவரது சகோதரர் தனபாலை மற்றொரு வீட்டிற்கு துப்பாக்கி முனையில் அழைத்து சென்று, அங்கு ரவீந்திரன் மனைவியிடம் இருந்து பீரோவில் உள்ள வைர நகைகளை பறித்து அவர்களிடம் இருந்த செல்போன் , ஏ.டி.எம் கார்டு உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் பறித்து கொண்டு, தனபாலையும் ஒரு சேரில் கட்டி வைத்து சென்று விட்டனர்.


அதனை தொடர்ந்து, ஒரு மணிநேரம் கழித்து தப்பி வந்த ரவீந்தரன் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார்இந்த சம்பவம் தொடர்பாக குற்றாலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை பிடிக்க பொது 2 தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். இது குறித்து, நம்மிடம் பேசிய ரவீந்திரன், இரண்டு நாட்களுக்கு முன்பு வீடு வாங்குவது போல் வந்து விசாரித்த 2 நபர்கள், மற்றும் 4 பேர் சேர்ந்து வரும் சுமார் 10 மணியளவில் டி.என்.51 5757 என்ற சுமார் பதிவெண் கொண்ட டவேரா காரில் வந்து என்பது வீட்டைக் காண்பிக்குமாறு கூட்டிச் சென்று, பேச்சு துப்பாக்கியைக் காட்டி மிரட்டி , என்னிடமிருந்த மாவட்டத்தைச் 8 பவுன் தங்கச் சங்கிலியையும் , பீரோவில் என்றும்இருந்த சுமார் 11 லட்சம் மதிப்பிலான எனது மனைவியின் வைர நெக்லஸ்களையும் கொள்ளையடித்து சென்று விட்டனர் என்றார். |


இதேபோன்று செப்டம்பர் 7 ஆம் தேதி தென்காசி நகரின் மையப்பகுதியில் பட்ட பகலில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. தென்காசி நகரில் ஆள் நடமாட்டம் அதிகமான பகுதியான சம்பத்தெருவில் வசித்து வருபவர் ஜெயபால் இவர். மர ஆலை மற்றும் மர அறுவை ஆலை உள்ளிட்ட பல்வேறு தொழில் செய்து வருகிறார்.


ஜெயபால் வெளியூர் சென்று இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது மனைவி விஜயலெட்சுமி வீட்டில் தனியாக இருந்ததை அறிந்து, பகலில் சுமார் 12 மணி அளவில் படுதா அணிந்த ஒருவரும், மற்றொருவரும் வி ஜயலெட்சுமியிடம் குடிப்பதற்கு தண் ணீர் கேட்க, வீட்டிற்குள் சென்று தண்ணீர் எடுத்துவர விஜயலெட்சுமி சென்றபோது, வீட்டிற்குள் சென்ற இருவரும் விஜயலெட்சுமியின் கை, கால்களை கட்டிப்போட்டு விட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டி பீரோ சாவியை எடுத்து, பீரோவை திறந்து அதிலிருந்து 100 பவுண் தங்க நகை மற்றும் ரூபாய் 60 ஆயிரம் பணத்தை திருடி சென்றதாகத் கூறப்படுகிறது


மேலமெய் ஞானபுரத்தில் ஜெயபால் நடத்தி வரும் மர ஆலைக்கும் , ரவீந்திரன் வீட்டுக்கும் சுமார் அரை கிலோ மீட்டர் தொலைவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையர்களின் பேச்சு வழக்கை கொண்டு அவர்கள் வட மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், இரு சம்பவங்களிலும் ஈடு பட்ட நபர்கள் ஒரே நபர்களாகத்தான் இருக்கும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.


ஒரே மாதத்தில் பட்டபகலில் துப்பாக்கி முனையில் நடந்த இரு கொள்ளைச் சம்பவங்களினால் தென்காசி மக்கள் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். போலீசுக்கு தண்ணி காட்டும் கொள்ளையர்கள் சிக்குவார்களா.?பொதுமக்களின் அச்சத்தை போக்குவார்களா..? தென்காசி போலீசார்!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!