பணியின் போது உயிர் நீத்த 151 காவலர்களின் கல்வெட்டுகள்: முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

பணியின் போது உயிர் நீத்த 151 காவலர்களின் உருவம் பொறித்த கல்வெட்டுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் திறந்து வைத்தார்.


டிஜிபி அலுவலகத்தில் காவலர் நினைவு சின்னம் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தாலும், தமிழக காவல் துறையில் 1962 - முதல் தற்போது வரை பணியின் போது உயிர் தியாகம் செய்த 151 காவலர்களின் உருவ பொறித்த கல்வெட்டுகளை காவல் துறையினர் அமைத்துள்ளனர்.


இதில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 29 காவலர்களின் கல்வெட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, நடைபெற்ற கல்வெட்டு திறப்பு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார், கே.பி அன்பழகன், தங்கமணி மற்றும் வேலுமணி ஆகியோர் கலந்துக கொண்டனர்.


பின்னர், டிஜிபி அலுவலகத்தில் மகிழம் மரக்கன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நட்டு வைத்தார்.